(Reading time: 2 - 3 minutes)

ஒரு துளி உயிர்த் துளி... - தங்கமணி சுவாமினாதன்

life

ஒரு துளி உயிர்த்துளி கருப்பையில் விழுந்தது..

உறுப்புகள் வளர்ந்த பின் உலகத்தில் நுழைந்தது..

தாய்ப்பால் குடித்தது தவழ்ந்தது நடந்தது...

தாயை மட்டுமே புரிந்தது அறிந்தது..

சுற்றும் பூமியில் எத்தனை எத்தனைத்

துன்பம் உண்டென துளியும் அறியாமல்..

தாயின் மடியினில் நித்திரை கண்டது..

ஆண்டுகள் இரண்டரை அன்னையின் அணைப்பிலே..

அழுதும் சிரித்தும் அமைதியைக்கண்டது...

முப்பதே திங்களில் ப்ளே ஸ்கூல் சேர்ந்து..

கற்பதே உன் கடன்.. இனி... நீயில்லை என்னுடன்..

நான் செல்வேன் வேலைக்கு..நீ செல்வாய் பள்ளிக்கென..

காலக்கொடுமையால் தாயும் நகர்ந்திட..

ஆயாவின் பாசத்தை வேஷமென அறியாமல்..

நிஜமான அன்பு முழு நேரம் கிடைக்காமல்..

தவியாய்த் தவித்து.. கொஞ்சம் பெரிதாய் வளர்ந்து..

படிப்பை முடித்தோர்  பட்டம் பெற்று..

வயிற்றுப் பிழைப்புக்காக வேலை தேடித் தேடி..

கிடைத்தது ஓர் வேலை..இனி அடுத்தது சுப வேளை..

பாலினக் கவர்ச்சியால் காமம் தூண்ட..

கண்டதே காதல் கொண்டதே கோலமெனக்

காதல் படுகுழியில் குப்புற வீழ்ந்து..

இல்லறம் எனும் நல்லறத்தை..

இருவருமாய்ச் சேர்ந்து வீணடித்து...

மனம் ஒத்துப் போகாமல் நடை பிணமாய்..

நாட்களை நகர்த்தும் தம்பதியர்..

உலகம் முழுதும் எத்தனையோ ஆயிரம்...

வறுமையும்,துரோகமும்,பிணியும்..

மரணமும்,பிரிவும்,கொடுமையும்..

கொலையும்,வன் புணர்ச்சியும்..

இது போல் பல துன்பம்..

இவ்வுலகில் உண்டென...

பிறக்கையில் தெரிவதில்லை...

தெரிந்தால் பிறப்போமா?ஆனால்..

இவையெல்லாம் உண்டென...

வளர்ந்த பின் அறிந்த நாம்..

ஒரு துளி உயிர்த்துளி..

கருப்பையில் விழுவதை...

??????....... 

இக் கவிதையைப் பிடிக்காதவர்கள்..வேறென்ன செய்வது?மன்னிக்க வேண்டியதுதான். நன்றி..

{kunena_discuss:779}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.