(Reading time: 2 - 4 minutes)

கவிதை - சாக்கடைக் கொசுக்கள்..... - தங்கமணி சுவாமினாதன்

mosquitoes

சிரிக்கிறாங்க..சிரிக்கிறாங்க--(தமிழ்)

நாட்டப் பார்த்து சிரிக்கிறாங்க..

நானிலத்தோர் நம்மைப் பார்த்துக்..

கை கொட்டிச் சிரிக்கிறாங்க..

அரசியல் மேடையிலே..

அலங்கோலம் நடக்குது பார்..

"நாற்காலி'ச் சண்டையிலே..

தமிழ் நாடு நாறுது பார்..

பதவி மோகம் பல பேரைப்..

பேயாய் ஆட்டுது பார்..

ஒரு கோடி இரு கோடி பல கோடி

குதிரை பேரம்..

திரை மறைவில் நடக்குது பார்..

பணம்... கைமாறிச் சேருது பார்..

கொள்ளையர்கள் கூட்டமிங்கே..

நாடகம் நடத்துது பார்..

கடைகளிலே "பொன்னாடை"..

ஏகமாய் விற்குது பார்..

நட்சத்திர விடுதிகளில்..

குட்டிகளின் குத்தாட்டம்..

புட்டிகள் உடைத்தாங்கே..

மது வெள்ள நீரோட்டம்..

கட்டுக் கட்டாய்ப் பணமுமங்கே..

போடுது பார் சதிராட்டம்..

நடக்குது பார் நடக்குது பார்..

தினமுமொரு பொம்மலாட்டம்..

ஆட்டுவிப்போர் எண்ணப்படி..

அரசியல்வாதிங்க  ஆடுறாங்க..

உடலை... வளைத்து நெளித்து.

குனிந்து குனிந்து... பயந்து பயந்து..

கூழைக் கும்பிடு போடுறாங்க..

பணத்துக்கும், பதவிக்கும்...

ஆலாய்த்தான் பறக்குறாங்க..

பதினோரு தலை முறைக்கு..

சொத்தைத்தான் சேக்குறாங்க.. 

ஓட்டளித்த நம்மையெல்லாம்..

ஏமாளி போல் பாக்குறாங்க..

"தண்ணீர்ப்" பிரர்ச்சனைக்கு..

சமாதிதான் கட்டியாச்சு..

"விவசாயிப்" பிரர்ச்சனைகள்..

மண் மூடிப் போயாச்சு...

"நீட்" தேர்வுப் பிரர்ச்சனையை..

நீர்த்துப்போக விட்டாச்சு...

என்னதான் நடக்குதிங்கே?..

ஒண்ணுந்தான் புரியலயே..

வாக்களித்த மக்களெல்லாம்....

விதியை எண்ணிப் புலம்புறாங்க..

அடுத்த தேர்தல் வரட்டுமென்று..

ஆக்ரோஷமாய்ப் பேசுறாங்க..

இதுபற்றி அச்சப்பட...

அரசியல்வாதி.. அசடா என்ன..?

தேர்தல் வரும் சமயத்திலே..

தேடிவரும் இனாம் பல..

பல்லிளிக்கும் வாக்காளர்கள்..

விரலில் வைக்கும் மையோடும்..

காதில் சுற்றும் பூவோடும்..

விண்ணில் பறக்கும் விலைவாசி..

தண்ணீர் இல்லாக் காலிக் குடம்..

பசுமையில்லா வயல்வெளிகள்..

பாதுகாப்பில்லா வாழ்க்கையென..

விரக்தியோடு வாழ்வதையே..

விதியென்று நினைத்திடுவர்...

நெஞ்சம் குமுறுதையா..

இந்த நிலையை நினைக்கும்கால்..

முண்டாசுக் கவிராஜா-- நீ..

மீண்டும்தான் வருவாயா..?

மக்களின்.... அறியாமை இருளைத்தான்..

உன் கவியாலே அழிப்பாயா..?

 

{kunena_discuss:779}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.