(Reading time: 3 - 5 minutes)

நான் அவனுக்கு சொந்தமானவள் - சசி

அன்றொருனாள்,

   செடியில் அழகாய் பூத்திருந்த மலர்களை கொலை செய்து

என் தலையில் சமாதி செய்தார்கள்.

   கைகளில் இருக்கபட்டிருந்த விலங்குகள்

இடம்மாறும் நேரம் அது.

   கூடி இருந்த சொந்தங்கள் புத்தாடை

அனிய ஆவலாய் காதிருந்தார்கள்.

   இயற்கை மழையை விரும்பும் எனக்கு தங்க மழையை

          தட்டில் வைத்து தந்தார்கள்.

   தோழிகளின் சிரிப்பு சத்தம் என்றும் இல்லாமல்

அன்று கசந்துதான் போனது.

   புது உறவையும் புது உறவினர்களையும்

நான் ஏற்க வேண்டிய நேரம் வந்து விட்டது.

   அதிகாலையில் சேவல் கூவும் போது

கெட்டிமேல சத்தமும் சேர்ந்தே ஒலித்தது.

   என்றும் இல்லா நடுக்கத்துடன் அன்று நான் இருந்தேன்.

              ஆம், எனக்கு திருமணம்.

   இரு மனம் ஒரு மனமாய் ஆகும் திருமணத்தை

நான் மனமின்றி ஒத்துகொண்டேன்.

   காரணம், ஒரு குடும்பத்தின் அங்கமாய் இருந்த நான்

தலைவியாய் ஆகபோகும் பயம் எனக்கு.

   வாழ்க்கையில் அனைவரும் கடக்க வேண்டிய கட்டதை

நானும் கடக்க அமர்திருந்தேன் அவன் அருகில்.

   தலை குனிந்தபடி ஒரக்கண்ண்ணிள் அவனை பார்ப்பதர்க்குள்

என் கலுத்து இன்னும் கனமானது.

   சனடங்குகள் முடிந்ததும் சொந்தங்கள் நகர்ந்தது.

   மண்ணில் விளையாடிய பருவம் பசுமையாய் என் நெஞ்சில் இருக்குபோது,

மஞ்ச நீர் விளையாடி கொண்டிருந்தேன் அவனுடன்.

   அனைவரும் கலைந்துபோக இரு வீட்டார் மட்டும்

இணைந்திருந்தர்கள்.

   இருட்டும் தனிமையும் பயம் என தெரிந்தோ என்னவோ,

அவன் இருக்கும் அரைக்குள் என்னை அனுப்பினாள் என் அன்னை,

கண்ணீருடன் கடமையை முடித்த சந்தோசத்தில்.

   உள்ளே சென்றதும் அவன் அருகில் வந்தான்.

   என் கையை பிடிக்க அவன் முயற்ச்சி செய்த போது

நான் பின்வாங்கினேன்.

   ஒரு நிமிடம் உற்று பார்த்த அவன்

என்னை உட்காரும்படி கேட்டுக்கொண்டான்.

   நான் சற்று தல்லியே உட்கார்ந்தேன்.

   என்னை பார்த்த போது அவனுக்கு என்ன தெரிந்ததோ

 எனக்கு தெரியவில்லை.

   சட்டென என்னை உறங்கும்படி சொல்லி விட்டான்.

   உறக்கம் வராமல் என் குழப்பத்தை அவனிடம் கூறினேன்.

   எப்படி எடுத்து கொள்வானோ என்ற பயமும்

அதிகமாகத்தான் இருந்தது.

   நான் சொல்வதை கேட்டுக்கொண்டிருந்த அவன் புன்சிரிப்புற்றான்.

   என் அருகில் வந்த அவன், என் கண்களை பார்த்து,

திருமணம் முடிந்ததும் சொந்தங்கள் நகர்வது உன் புதிய சொந்தத்தை நீ சேரத்தான்.

   இன்று முதல் நீ எனக்கு சொந்தமானவள்

நான் உனக்கு சொந்தமானவன் என்றான்.

   அக்கனமே என் நடுக்கம் நானமாய் மாறிப்போனது.

   அந்த இரவு பேச்சு வார்த்தையிலேயே முடிந்தது.

   முதல் நாளன்று அவன் கை பிடிக்க வருகயில்

பின்வாங்கியதாலோ என்னவோ,

பல இரவுகள் பின் வாங்கிக்கொண்டே போனது.

   ஒரு நாள் அவன் அசந்து உறங்கி கொண்டிருந்தான்.

   என்றும் இல்லாமல் அவன் தலை கோத என் கைகள் முன் வந்தன.

   சட்டென விழித்த அவன் என் கைகளை பிடித்தபடி

அன்று முயன்றேன் இன்றுதான் முடிந்தது என்றான்.

   உடல் சிலிர்த்த நான் புன்னகையில் பூரித்து போனேன்.

   இன்னும் உன் நடுக்கம் நிற்க்கவில்லையா என்று கேட்டான் அவன்.

   கண்களை மூடியபடி ம்ம்.. என்று உச்சரித்தேன்.

   சில நிமிட மௌனமும் பல மணி நேர போராட்டமும் மாறி மாறி நடந்தது.

   இப்படி பல போராட்டத்தை கடந்த பிறகு அவன் எனக்கு பரிசளித்தான்.

   இன்று அந்த பரிசை தனக்கு சொந்தமாக்க ஒருவன் வந்துவிட்டான்.

   ஆனாலும் பசுமையான நினைவுகள் மட்டும் என்றும் என்னுடனேயே.

   இரந்தாலும் வாழ்வேன் என்றும் அவனுக்கு மட்டும் சொந்தமானவளாக..!

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.