(Reading time: 2 - 4 minutes)

என்றும் என்னோடு அவன் - புவனி

Brother

நடை பயிலும் வயதில்

என் விரல் பிடித்து துணை

செல்ல என் தாய் கொடுத்த

தோழன் அவன்............

மொழி அறியா வயதில்

அவன் மொழி மட்டும் எனக்கு

புரிய செய்தவன் அவன்

குட்டி குட்டி குறும்பினில்

என்னை சீண்டி பார்க்கும்.......

என் செல்ல ஹிட்லர் அவன்

என் சமையலை குறை கூறாமல்

உன்னும் செல்லம் அவன்

எங்கள் சண்டைகளை சிறிது நேரம் கூட

நிலைக்க செய்யாமல் இருக்கும்

வித்தை அறிந்தவன்  அவன் 

பாசத்தை கூட கோவமாய் காட்டுவதில்

என் தந்தையின் சாயல் அவன்

என் கண்ணீர் பொறுக்காமல்

என்னிடம் இறங்கி வருவதில்

என் அன்னையின் நிஜம் அவன்

என்னிடம் கெஞ்சுவதில் குழந்தை அவன்

என் கோவத்தை கரைப்பதில் வீரன் அவன்

சேட்டைகளில் அந்த மாயக்கண்ணனுக்கு

போட்டி அவன்.....

சண்டைகளில் ராவணன் அவன்

இன்றும் திருமணம் என்னும் பந்ததில்

என்னை நுழைய வைத்து வீட்டை விட்டு

துரத்த போவதாக சொல்லி.........

என்னை அழ வைத்து

எனக்கு தெரியாமல் அதை நினைத்து 

வருந்துபவன் அவன்

என் உயிரில் பாதி கொண்டு

என் உணர்வுக்குள் நுழைந்து

என்றும் என் நினைவாய் நிற்பவனும் அவன்

அவன்...... என் தம்பி

தெரியவில்லை எனக்கு எப்படி இவனுடன்

இத்தனை வருடங்களாக கண்மூடி

திறக்கும் நொடியாய் போனதென்று........

உன்னை பார்க்கும் ஒவ்வொரு நொடியும்

என் பெண்மைக்குள் இருக்கும் தாய்மை

உயிர்தெழுகிறதடா........உறவே

என் மகனாய் நீ வந்தாய்

தம்பி என்னும் பெயர் தழுவி

 

வணக்கம் மக்காஸ்,

எனக்கு ரொம்ப ரொம்ப சந்தோஷமா இருக்கு. நான் டபுள் டிஜிட் தொட்டுட்டேன் யெஸ் திஸ் இஸ் மை டென்த் போயம். என்னோட முதல் கவிதை என் உயிர் தோழிக்கு ஒரு ஸ்பெஷல் பெர்சன் (மை ராஜி மா) பத்தி எழுதினது. இதுவும் ஸ்பெஷல் தான் நான் இந்த உலகத்திலயே ரொம்ப சண்ட போட்ட போட்டுகிட்டு இருக்கிற ஒரு நல்லவன பத்தி ட்ரை பண்ணிருக்கேன் என்னமா அந்த பையன பத்தி இவ்ளோ நேரம் புகழ்ந்திட்டு இப்படி சொல்றேனு கேக்குரிங்களா வாட் வீ டூ எங்க ஃபைட்ஸ்சோடா கவுண்டிஇங் கேட்டா மேத்ஸ்கே மேத்ஸ் மறந்திரும் பா ஹி ஹி... பட் ஹி இஸ் மை பிரிசியஸ் கிஃப்ட் லைக் மை மதர்.

{kunena_discuss:779}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.