(Reading time: 2 - 3 minutes)

கவிதை - மழைப்பேச்சு - நிலவினி

rain

என்றாே சந்தித்த சிநேகங்களின் சிலிர்ப்பு..........
எப்போதோ  கடித்த கரகர பண்டங்களின்
காரம்........
ஐன்னலோர பேருந்து ஜலக்கீரிடை
ஜாலங்கள்.......
நனையக்கூடாதா நேரங்களில் நனைந்த தவிப்பு.....
உலராமல் உறுத்திய துணிகளின்
ஈரம்....
இதமாய்  ஈரமாய் இசைந்து வந்த பாடல்......
எங்கிருந்து வருகிறது இவ்வளவு நீர்
என்ற மழலை மனதேடல்......

குறும்பாய்  குடைமறந்து
குளித்துக்  கொண்டே
கூடுடைந்த குதூகலம்.......

அடங்கா மழலை ஆர்ப்பரிப்பாய்
பொழிந்து.....
அயர்வான முதுமையாய்  ஓய்ந்த
மௌனங்கள்......

பிரிந்தவர்களை  சட்டென ஞாயகப்படுத்தும்....
பிசுபிசுப்பு   பிரமைகள்........

அன்றாட  அவலங்களாய்
தூசு படிந்த
சாலைகளையும்,சாமானியர்களையும்
துடைத்தெடுத்த   தூரல்கள்

மழை நொடிகளே......
பிழை நெடிகளேன....
குமுறும் வீடற்றவர்களின்
சாபங்களாய் ....

மழை இரசிப்பை
மெருகேற்றும்
தனிமை சபலங்களாய்.....

சாளரங்களே கதியேன முடங்கியவர்களின்
சலிப்பகற்றிய
சந்தோஷமாய்.....


விததை்தவனே மறந்துபோன
விதையின் விருட்ச
விருத்தியாய்.......

கவிஞர்களின் மொழியாய்
கவிதைகளின் வழியாய்

மழை நம்மிடம் நிறைய
பேசிக் கொண்டுதான் இருக்கிறது...

நாம்தான் கேட்பதில்லை...
வாருங்கள் சற்று....
மழை பேசுவோம்!

{kunena_discuss:779} 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.