(Reading time: 1 - 2 minutes)

சாமியாடி - ராஜலக்ஷ்மி

Peace

கொடை  கொடுத்தாயிற்று ...

பலி  இட்டாயிற்று ...

கோடங்கி  சாமியாரும் 

குறி  சொல்லும்  நேரமிது !

 

நெஞ்சமெல்லாம்  வஞ்சம் 

நினைவெல்லாம்  பகை 

சிரசெல்லாம்  கர்வம் 

சிந்தையெங்கும்  சுயநலம் 

நம்மையா  வந்து  சேரும்  தெய்வம் ?. . 

 

பணக்கார  கடவுளென்றும் 

பண்டாரக்  கடவுளென்றும் 

பிரித்து  பொருள்  கொண்டது 

மனிதமேயன்றி  தெய்வமல்ல . . .

 

வணங்கினால்  வரம் . .

இல்லையேல்  சாபம் ...

மாந்தர்க்கு  இயல்பிது 

கருணைக்  கடலுக்கு  பொருந்தாது 

 

உயிர்களிடத்து  அன்பு  நோக்கும் 

உயிர்ப்  பலி  கேட்காது . . .

 

இன்ன  இன்ன  செய்தால் 

இன்ன  பொருள்  கிட்டும் - என்று 

கொடுக்கல்  வாங்கல்  வைத்துக்  கொள்ள 

கடவுளொன்றும்  வனிகனல்ல 

 

தீ  மிதித்தல் 

தினம்  நோன்பு 

மண்  சோறு 

அங்கப்ரதட்சணம்  என்பீர் !

அத்துணையும்  இயற்றியவர்  

மாந்தர்  தாமே !

 

ஆலயங்களிலும்  செய்து  வைத்தீர் 

அவலங்கள்  பல . . .

செல்வந்தர்க்கு  சிறப்பு  வழி 

இல்லாதோர்க்கோ  பொது  வழி  - பின் 

ஆண்டவன்  முன்  அனைவரும் 

சமமாம் ! ! !

 

மாய்ந்து  போன  மனிதத்தை 

மீட்டெடுப்போம்  மாந்தரே ! - பின் 

கோடி  கோடி  தெய்வங்கள் 

குடி  கொள்ளும்  உமதுள்ளத்தில்.

{kunena_discuss:779}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.