(Reading time: 1 - 2 minutes)

கவிதை - காதல்−ஒரு  பார்வை - ரேவதிசிவா

Love

பேசிக்கொண்டனர்

காதல் தோல்வியில் தற்கொலை!

கேட்டதும் வருந்தியது மனம்...

நாளிதழைப் பிரித்துப் பார்த்தேன்

நடுங்கியது

கைகளோடு நெஞ்சமும்...

ஒருதலைக் காதல்

ஒரு உயிரைப் பரித்தது...

கேள்விப்பட்டேன்

பள்ளி சிறுமியின் உடன்போக்கு...

படிக்கும் வயதில் காதலா!

புரியவில்லை

இந்த காதலின் பொருள்....

நானறிந்த காதலின் பொருள்

நேசம், பாசம்,அன்பு,அக்கறை

இவைதாம்...

நம் பெரியோர்களும் இதைத்தான் சொல்கின்றனர்

ஆனால்− இவர்கள் காதல்?

அனைவரையும் அழித்து

தன்னையும் அழித்து

கடைசியில்

காதலின் நற்பெயரையும் அழிக்கிறது...

உங்களுக்கு உண்மைக் காதலின் அர்த்தம் தெரியவேண்டுமா?

உங்களை ஈன்றோர் காட்டியதும் காதல்தான்

உங்களின் உடன்பிறந்தோர் காட்டியதும் காதல்தான்

உங்களின் உயிர்நட்புக்ள் காட்டியதும் காதல்தான்

உங்களை வாழவைத்த ,இவர்கள் காதலுக்கு ஈடாகுமா?

உங்களையும் மற்றவரையும் அழிக்கும் உங்கள் காதல்...

அவர்கள் செய்யவதற்ககுப் பெயர் காதலென்றால்

நீங்கள் செய்வதற்குப் பெயர்???????

(காதல் என்ற பெயரில் வாழ்க்கையை தொலைப்பவர்களுக்கு)

 

{kunena_discuss:779} 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.