(Reading time: 2 - 4 minutes)

கவிதைத் தொடர் - 01. தவமிருக்கிறேன் என்னவனே - கார்த்திகா கார்த்திகேயன் 

என்னவனின் காந்த கண்கள்

Eyes

முதல் பார்வையிலே  என்னை சிறை பிடிக்கும்

வித்தையை எங்கு கற்றாய் என்னவனே ......

 

கத்தியும் தோல்வி அடையும்

என்னவனின்  கூர் பார்வையில்.....

 

உயிர் வரை தீண்டும் ஒற்றை பார்வையில்

வளைகிறேன்  நான் ஞானலாய் .......

 

புரிய வைத்து விடுகிறது உன் கண்கள்

நீ பேசாத வார்த்தைகளை கூட .......

 

இமைத்தால்  மறைந்து விடுவாயோ என்று

விழி மூடாமல் பார்க்கிறேன் உன்னை ......

 

என்னை கட்டி இழுக்கும் காந்தமாய் 

உன் கண்கள் இருக்கும் விந்தை என்ன........

 

உன் கண்களுக்கு விருந்தாய் 

என்னை படைத்த கடவுளுக்கு நன்றி.....

 

ஒளி பெறுகிறது என் உலகம்

உந்தன் ஒற்றை பார்வையால்......

 

உன் கண்ணீரை திருடும் திருடியாய்  

மாற வரம் தருவாயோ என்னவனே...

 

உன் பார்வை வரம் கிடைக்க

தவமிருக்க கூட தயார்  தான்...

 

உன் கண்கள் என்னை பார்க்காத தவறு செய்தால் 

என் இதயம் வலி  அனுபவிக்கும்...

 

உன் கரு விழியாக வாழும் வரம்  வேண்டும்

அதை விட வேறு இதமான இடம் உண்டோ...

 

ஒற்றை பார்வையை என்னை நோக்கி வீசி விடு 

அதில் என் இதயம் வாழ்ந்து கொள்ளட்டும்....

 

ரசித்தே வெக்கம்  கொள்ள வைக்கின்றாய் 

ஒற்றை பார்வையால் .....

 

என் மீது உள்ள நேசத்தை  சொல்கிறது 

உன் முறைப்பான பார்வை.....

 

உன் விழியை காண காத்திருக்கிறேன்

இமை மூடாது  வந்து விடு  விரைவில்........

 

பெண்களின் கண்கள் மட்டும் அழகு என்று யார் சொன்னது 

அவர்கள் பார்க்க வில்லை உன் விழிகளை........

 

புவியீர்ப்பு  விசைக்கு மட்டும் தான் உண்டா ஈர்ப்பு விசை

அதை விட அதிகம்கண்டேன்  உன் கண்களில் .........

 

நான் யார் என்ற கேள்விக்கு என்னை நோக்கும் 

உன் கண்களின் பதில் மட்டும் போதும்........

 

என்னை அழகானவளாக உணர செய்தது 

உன் ஒற்றை காதல் பார்வை.........

 

உன் கண்களை பற்றிய கவிதைகள் அழகு தான்

உன் கண்கள் சொல்லும் காதலும் அழகு தான்

உன் பார்வை பேசும் வார்த்தை அழகு தான்

உன் இமைகள் மூடும் மௌனம் அழகு தான்

உன் பார்வையில் விழும் அனைத்தும் அழகுதான்

தவமிருக்கிறேன் உன் விழி காண என்னவனே!!!!!!!!!!!!!!

 

{kunena_discuss:779}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.