(Reading time: 1 - 2 minutes)

கவிதை - தமிழ் மொழி - செய்யது சுலைஹா நிதா

tamil

கம்பர் கவிமாரி பொழிய உதவிய மொழி எம்மொழி…

வள்ளுவன் வழங்கிய திருக்குறளை மூலதனமாக்கிய மொழி எம்மொழி…

வீரமாமுனிவர் எழுச்சியுடன் கற்க ஏங்கிய மொழி எம்மொழி…

முண்டாசு பாரதியை உச்சம் தொடச் செய்த மொழி எம்மொழி…

வீதியெங்கும் மக்கள்படும் பாட்டை வீரமுடன் எடுத்துரைத்த தியாகிகள் பலர் தோன்றிய மண்ணிலே உதித்த மொழி எம்மொழி…

அன்னை மடியாம் தமிழ் மடியினிலே பிறமொழிகளுக்கும் அடைக்கலம் தந்த அருமையான மொழி எம்மொழி…

ஆரீராரோ முதல் ஆஸ்கார்வரை எதிரொலிக்கும் எளிமையான மொழி எம்மொழி…

அடக்கமுடியா ஆசைகளை உடைய மக்கள் மனத்திலே நுழைந்து,

அழிக்க முடியா இன்னிசையான சங்கீதத்திலும் கலந்து,

புகழ் பெற்று, கவித்துவம் தாங்கி, தனித்துவம் ஓங்கி,

ஆயிரம் வருடம் பழமையான மொழியாக இருந்தாலும், என்றும் இளமை மாறாமல் அனைவரின் மனத்திலும் நங்கூரம் போல் நிற்கும் மொழி எம்மொழி...

எவர் அழிக்க நினைத்தாலும் அழியா வரம் பெற்று என்றும் நிலைத்திருக்கும் மொழி எம்மொழி…

அதுவே உலகின் உயர்தனிச்செம்மொழி….

 

{kunena_discuss:779}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.