(Reading time: 2 - 3 minutes)

கவிதை - எனக்காக !! - மித்ரா

forgotten love

அன்பைத் தந்தேன் !

அறிவைத் தந்தேன் !

நீ கூறும் அனைத்துக்கும்

தலையாட்டி பொம்மைப் போலே ஆடினேன் !

 

கணவன் மனைவி என்ற

உறவுகளுக்குள் அனைத்தும்

சகஜம் என்று நம்பினேன் !!

 

காதலித்தேன் !! நீ தான் 

என் உலகம் என்று உயிராயிருந்தேன் !!

நீயும் என்னை நேசிக்கிறாய்

என்று மனதார நம்பினேன் !!

 

அதனால என்னையே தந்தேன் !

இவ்வுலகில் எல்லாவற்றையும் விட

முழுமையான வாழ்கை வாழ்வதாக

கர்வம் கொண்டேன் !!

 

ஆனால்,

நீ முட்டாளடி பெண்ணே,

என்னிடமே நிருபித்தாயடா !!

 

உன்னோடைய, 

சுயநலத்திற்காக என்னை பயன்படுத்தினாய் 

என அறியேன் நான் !!

எதிர்பார்த்தேன் ! என்றேனும் என்னை

புரிந்துகொள்வாயேனா !!

 

சுயமரியாதையை இழந்தேன்,

என்றேனும் நீ திருந்துவாயென !!

ஆனால்,

உன் வாழ்வில் நான் ரோஜா

மலர்கள் அல்ல, வெறும்

காகிதப் பூக்களே !!

 

ஒரு நிமிடத்தில் தூக்கியேறிந்தாய்

என் காதலை !! நம் எதிர்காலத்தை !!

 

வலித்தது விலகினேன் !!

பிரிவும் நம்மை இணைக்குமே 

என ஒரு நம்பிக்கையுடன் !!

 

நீ என்னை மறந்தாய் ! நம் காதலை,

நாம் வாழ்ந்த வாழ்கையே !

என் எதிர்பார்ப்பை, நம்பிகையை

சுக்குநூறாக உடைத்தெறிந்தாய் !!

 

உடைந்து விட்டேன் ! உயிர்

வாழ மறந்து விட்டேன் !!

உயிர் உள்ளது !! உயிர்ப்பு இல்லை !!

 

தோல்வியே உணர்ந்தேன் !

மறக்க முயன்றேன் !!

நீ செய்த துரோகத்தை !!

 

மறந்து விடக்கூடதேன்ற நினைப்பிலேயே

தொலைந்து போய் விடுகிறேன் !!

இருப்பினும் முயன்றேன் !!

 

கிடைத்த விடையோ !!

மன்னிப்பு ஒன்றே !!

 

உன்னால் ஆன கோபதாபங்களை,

தோல்வியை, காயங்களைத் 

தந்த உனக்கு, நீ எதிர்பார்க்காத

மன்னிப்பை வழங்குகிறேன் !!

 

உனக்காக அல்ல !!

எனக்காக !!

{kunena_discuss:779}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.