(Reading time: 1 - 2 minutes)

கவிதை - அம்மா - சாஹித்யா

mother

ஈரைந்து மாதங்கள் கருவறையில் சுமந்தவளே!

சிரமங்கள் பலவும் சிரமேற்று ஈன்றவளே!

உதிரத்தை அமுதாய் ஊட்டி வளர்த்தவளே!

என் பிணி தீர்க்கும் மருந்தானவளே!

இரவும் பகலும் கண்ணின் இமையானவளே!

மழலைப் பேச்சினிலே மலர்ந்து சிரித்தவளே!

நான் உறங்க நீ உறங்காமலே!

தாலாட்டுப் பாடியே துயில வைத்தவளே!

அகரத்தைக் கற்பித்து அறிவைக் கொடுத்தவளே!

உயிருக்கு மெய்யாய் உன்னில் காத்தவளே!

அம்மா என்றாலே அன்பென்று ஆனவளே!

எனை காக்கும் தாயும் நீயே!

எனை ஆளும் இறையும் நீயே!

எத்தனை ஜென்மம் நான் எடுத்தாலுமே!

நீயே எந்தன் தாயாக வேண்டுமே!

இன்னும் ஒரு பிறவி இருந்தாலுமே!

என் நன்றிக் கடன் தீர்த்திடுவேனே! 

 

{kunena_discuss:779} 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.