நன்றி நாயின் அடையாளம்
பாசம் பசுவின் அடையாளம்
ஓற்றுமை காகத்தின் அடையாளம்
சுறுசுறுப்பு தேனீயின் அடையாளம்
வீரம் ஆணின் அடையாளம்
தாய்மை பெண்ணின் அடையாளம்
புவியில் ஜனித்த அனைத்து
ஜீவராசிகளுக்கும் உண்டு அடையாளம்
திருநங்கைகளை தவிர
ஒன்பது, அலி, உஸ் என்ற கேலி
அடையாளங்கள் வேண்டாம்
அர்த்தனாதி என்று கௌரவிக்கும்
அடையாளமும் வேண்டாம்
பரந்து விரிந்த இப்புவியில்
உரிமைகள் அவர்களுக்கும் உண்டு
என்ற வகையில் சக மனிதராய்
அடையாளப்படுத்துவோம் உலகிற்கு!!!
thanks sis
Nice poem ma'am 👏👏👏 thank u.
Yes Brthr
thank you brthr
பிடித்திருக்கிறதா?
Superb Sir