குளிகன் அல்லது குளிகை காலம்:
குளிகன், சனிபகவானின் மகன் எனச் சொல்கிறது ஜோதிட சாஸ்திரம். அந்தக் குளிகனுக்கென ஒவ்வொரு நாளிலும் ஒதுக்கப்பட்டுள்ள நேரமே குளிகை காலம். தினசரி பகலில் ஒன்றரை மணி நேரமும், இரவில் ஒன்றரை மணி நேரமும் நடைபெறும். குளிகை காலத்தில் நற்காரியங்களை மட்டுமே செய்யலாம். ஏனெனில் இந்த நேரத்தில் செய்யப்படும் செயல் தடை இல்லாமல் தொடர்ந்து நடைபெறும் என்பது நியதி. எனவே அசுப காரியங்களைத் தவிர்ப்பது அவசியம்.
கரிநாள்:
ஒவ்வொரு வருடமும் வரும் 365 நாட்களில் 34 நாட்கள் கரி நாளாக அமையும். இந்த நாட்களில் சுபகாரியங்களைத் தவிர்ப்பது நல்லது.
சித்திரை 6, 15
வைகாசி 7, 16, 17
ஆனி 1, 6
ஆடி 2, 10, 20
ஆவணி 2, 9, 28
புரட்டாசி 16, 29
ஐப்பசி 6, 20
கார்த்திகை 1, 10, 17
மார்கழி 6, 9, 11
தை 1, 2, 3, 11, 17
மாசி 15, 16, 17
பங்குனி 6, 5, 19