Chillzee KiMo வில் பப்ளிஷ் ஆகி இருக்கும் Chillzee KiMo எழுத்தாளர் வளர்மதி கார்த்திகேயனின் நாவல் 'கடலோடு முகில் பிரியும்'.
அந்த நாவலைப் பற்றி இங்கே பார்ப்போம்.
கல்லூரியில் வேலை செய்யும் சுமதியும், மாலதியும் கல்லூரி டூருக்கு மாணவர்களை அழைத்துக் கொண்டு மலை பிரதேசத்திற்கு வருகிறார்கள். கல்லூரியின் ப்ரின்சிபலுக்கு தெரிந்த ஒருவரின் வீட்டில் தங்குகிறார்கள். அந்த வீட்டில் இருக்கும் அருண் சுமதியை பார்த்ததும் அதிர்ந்துப் போகிறான். சுமதியுடனே இருக்கும் மாலதி அவர்கள் இருவர் நடுவே என்னவோ இருப்பதாக யுகிக்கிறாள். அதைப் பற்றி நேரடியாக சுமதியிடம் கேட்கவும் செய்கிறாள். அருண் தன் கணவன் என்ற உண்மையை பகிர்கிறாள் சுமதி.
சுமதியும் அருணும் எதனால் பிரிந்தார்கள், பிரிந்தவர்கள் இணைந்தார்களா என்பது மீதிக் கதை.
ஒரு குடும்பத்தில் நிகழும் எதிர்பாராத சம்பவங்களை கதையாக சொல்லும் நாவல்.
குடும்ப நாவல் வாசகர்களை கட்டாயம் கவரும்.
கடலோடு முகில் பிரியும் போல இன்னும் பல இனிமையான, தரமான கதைகளை ரிலாக்ஸ்டாக படிக்க, இன்றே Chillzee KiMo பக்கம் செல்லுங்கள். சப்ஸ்க்ரிப்ஷன் ரூபாய் 50/- முதல் தொடங்குகிறது!
- அபூர்வா