(Reading time: 10 - 19 minutes)
Irulum oliyum
Irulum oliyum

“முடியாது. இப்பவே பார்க்கணும்.”

“கவலைப்படாதம்மா... நாளைக்கு... எப்பாடு பட்டாவது ஒரு கட்டில் வாங்கிடுறோம். ரெண்டு நாளையில்... மெத்தை வாங்கிடுறோம்...”

“அய்யோ... நான் கட்டில் மெத்தைக்காக... அவங்களை பார்க்கணுமுன்னு சொல்லல... தெருவுல நின்றாவது நான், என் அப்பாவையும், அம்மாவையும் பார்க்கணும்... பார்த்தே ஆகணும்... இப்பவே பார்க்கணும்...”

“இப்போ எப்படிம்மா முடியும்... நடு ராத்திரி...”

“பரவாயில்ல... பார்க்கணும்...”

“அது எப்படிம்மா...”

“அப்பா... அம்மா...”

“ஏம்மா அழுகிற?”

“அப்பா... அம்மா... வாங்கப்பா... வாங்கம்மா... என்னால அங்க வர முடியல... நீங்களாவது வாங்க...”

“மல்லிகா... அம்மா சொல்றதக் கேளும்மா...”

“அப்பா... அம்மா... அம்மா... அம்மா... அப்பா...”

மல்லிகா போட்ட கூச்சல் அழுகையில், அப்போது அழுது கொண்டிருந்த சின்னப் பிள்ளைகள், தாங்கள் அவளை விட பெரிய பிள்ளைகள் என்பது போலவும், அவள், தங்களை பெரிய பிள்ளைகளாய் ஆக்கிவிட்டது போலவும், அவர்கள் அழுகையை நிறுத்திய போது, அவள் மேலும் பலமாக அழுதாள்.

“அப்பா... அம்மா... அப்பா... என் அப்பா... என் அம்மா...”

எல்லோருமே, அங்கே கூடிவிட்டார்கள். வேறு வேறு வீடுகளில் இருந்தவர்கள் கூட, வெளியே வந்து, நடைக் கதவைத் தட்டினார்கள். மல்லிகா, அழுகையை நிறுத்தவில்லை.

“அப்பாவைப் பார்க்கணும். அம்மாவைப் பார்க்கணும். யாராவது கூட்டிட்டுப் போங்க... அய்யோ... எங்க அப்பாவைப் பார்க்கணும்... அம்மாவை...”

பெருமாள், மகளையே பார்த்துக் கொண்டு நின்றார். உள்ளம் கலங்கியதால், கண் கலங்கியது. பிறகு, இந்தக் கலக்கத்திற்குக் காரணமான சொக்கலிங்கத்தின் மீது கொலைத்தனமான கோபம் ஏற்பட்டது. கோபத்தை சிறிது குறைத்துக் கொண்டே பேசினார்.

“உன் இஷ்டம்... உனக்கு இங்க இருக்கிறது பிடிக்கலன்னா, இப்பவே கொண்டு விடத் தயாராய் இருக்கேன்... என் மானத்தை விட்டு, உன்னை... அங்கே கொண்டு விட்டுட்டு, அவன் கிட்டே மன்னிப்பு வேணுமுன்னாலும் கேட்கிறேன். ஏன்னா... இந்த அம்பது வருஷமா மானத்தோட

One comment

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.