(Reading time: 6 - 12 minutes)
Muthu Sippi
Muthu Sippi

மாட்டிக்கொண்டு விட்டால் அவன் ஜோராகத்தான் இருந்தான். ஆளை நாளடைவில் உருக்கி உருக்குலைக்கும் காச நோயாளி அவன் வலுவூட்டும் ஆகாரங்களும் டானிக்குகளும் அவனை அவ்வளவு ஜோராக வைத்திருந்தன. 'நெட்டி யால் செய்த பொம்மை இது. என்றைக்காவது இது சாய்ந்து விடும்' என்று பவானி நினைக்கவே யில்லை. எப்படியாவது அவனைக் காப்பாற்றி விடலாம் என்று தான் நினைத்தாள். நல்ல காற்றுக்காகவும், சுகவாசத் துக்காகவுமே அவள் பசு மலைக்கு வந்தாள்.

கல்யாணமாகிய சுருக்கில் அவள் ஒரு குழந்தைக்குத் தாயும் ஆகிவிட்டாள். செக்கச் செவேலென்று அவள் அந்தத் தங்க மதலையை ஈன்றபோது இருவர் உள்ளங்களும் கரை காணாத ஆனந்த வெள்ளத்தில் திளைத்தன. ’வாழ்க்கை தித்திக்கும் தேனாகவும், செங்கரும்பாகவும் தான் இருக்கப் போகிறது’ என்றெல்லாம் நினைத்தார்கள். ஆனால், குழந்தைக்கு நான்கு வயது ஆவதற்கு முன்பு வாசுவின் உடல் நிலை பாதிக்கப் பட்டது. திடீரென்று அவன் வாய் ஓயாமல் இரும ஆரம்பித்தான்.

"டாக்டரிடம் காட்டி மருந்து சாப்பிடுங்கள்" என் றாள் பவானி.

ஆமாம், இருமலுக்குப் போய் மருந்து சாப்பிடுகிறார்கள்! ஏதாவது கஷாயம் வைத்துக் கொடு" என் றான் வாசு அவளிடம்.

கஷாயத்திலும் கல்கத்திலும் தற்கால வியாதிகள் மசிந்து போகிறதில்லை என்பதை அவன் என்ன கண்டான்?

"பவானி! சாயங்காலத்தில் ஜுரம் அடிக்கிற மாதிரி இருக்கிறது. லேசாகத் தலைவலி கூட இருக்கிறது" என்றான் ஒரு தினம் அவன், காரியாலயத்திலிருந்து வீட்டுக்கு வந்தவுடன்.

பவானி பதறிப் போனாள். "சொன்னால் கேட்டீர்களா? பெரிசாக எதையாவது இழுத்து விட்டுக் கொண்டு?" என்று சொல்லிக் கொண்டே கணவனை அழைத்துக்கொண்டு டாக்டர் வீட்டுக்குக் கிளம்பினாள்.

அங்கே டாக்டர் அவனைப் பரிசோதித்து விட்டு, ”என்ன சார்! ஒரு மாசமாக இருமுகிறது என்கிறீர்கள்? சாவகாசமாக வருகிறீர்களே! காசம் ஆரம்பித்திருக்கிறதே" என்றார் ஈனஸ்வரத்தில்.

பவானியின் மனம் ’திக்' கென்று அடித்துக் கொண்டது. இருந்தாலும் அவள் தைரியசாலி. நம்மால் முடிந்தவரை நல்ல வைத்தியமாகச் செய்து பார்க்கிறது" என்றாள் டாக்டரிடம் தைரியமாகவே.

செய்து தான் ஆகவேண்டும் அம்மா. வியாதி பணத்தைச் சாப்பிட்டு ஏப்பம் விட்டு விடுமே!" என்றார் டாக்டர்.

பணத்தை நாம் தானே சம்பாதிக்கிறோம்? அதுவா நம்மைச் சம்பாதிக்கிறது? என்னால் முடிந்த

One comment

  • Thodakkam sogamaaga irunthaalum pogapoga nandraaga irukkum endru nambuvom.eagerly waiting 4 next epi. :thnkx: & :GL:

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.