(Reading time: 7 - 14 minutes)
Muthu Sippi
Muthu Sippi

கிறீர்கள்?" என்று கேட்டாள்.

  

"கல்கத்தாவுக்குப் போகிறேன்" என்றான் மூர்த்தி.

  

என்ன விஷயம்? காலையில் என்னிடம் சொல்லவே இல்லையே..."

  

உன்னிடம் சொல்லி விட்டுத்தான் நான் எதையும் செய்யவேண்டுமா?"

  

அப்படிச் சொல்லவில்லையே. எனக்குத் தெரிந்தும் சில காரியங்களை நீங்கள் செய்யலாமே..."

  

அப்படி உனக்குத் தெரியாமல் என்ன செய்துட்டேனாம்...?"

  

ராதாவுக்கு ஆத்திரம் பொங்கிக் கொண்டு வந்தது. ”’நீங்கள்..” என்று தடுமாறினாள் சிறிது நேரம்.

  

சொல்லேன். நீ படித்தவள்! என் தயவு உனக்கெதற்கு...? உன்னை வைத்துக் காப்பாற்ற நிறையச் சம்பாதிக்கும் தமையன் இருக்கிறார். உன்னிடம் அன்பு செலுத்த அந்தச் சுவாமிநாதன் வேறு இருக்கிறார்”.

  

யார் இருந்தால் எனக்கு என்ன பிரயோசனம்? ஒழுங்காக இருக்க வேண்டியவர் சரியாக இருப்பது தான் எனக்கு முக்கியம்......"

  

சுற்றி வளைத்துப் பேசுகிறாய் ராதா? சொல்ல வந்ததைச் சொல்லி விடு..." என்று சொல்லியவாறு மூர்த்தி அங்கிருந்த சோபாவில் உட்கார்ந்தான்.

  

ராதாவுக்கு துணிச்சல் ஏற்பட்டது.

  

"என்னுடைய வைர வளையல்களைக் காணோம்! மத்தியானம் பூராவும் தேடினேன்! அந்த நகை குடும்பச் சொத்து. அண்ணா அதை எனக்குக் கொடுக்க இஷ்டமில்லை யென்றால் ஜெயஸ்ரீக்கு கொடுத்திருக்கலாம். அவர் அப்படிச் செய்யாமல், எனக்குக் கொடுத்தார். அதை இழக்க நான் சம்மதப்பட வில்லை."

  

One comment

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.