(Reading time: 7 - 13 minutes)
Aval Vizittiruntal  - Caroja Ramamurti
Aval Vizittiruntal - Caroja Ramamurti

புரிந்தது.

  

அன்று பட்டப்பா சாப்பிடும்போது, "நாம இரண்டு பேருமா எங்கேயாவது போயிட்டு வரலாமே. எனக்கு இங்கே இருந்து அலுத்துப்போச்சு" என்று நர்மதா கேட்டாள்.

  

"எங்கே போகிறது?"

  

"போறத்துக்கு இடம் தானா இல்லை? இப்படி காசி ராமேஸ்வரம்னு போறது. பணமா இல்லை. அக்கா போய் இரண்டு வருஷமாறது. வீட்டை விட்டு நகரலை"

  

"எனக்கு அதெல்லாம் பிடிக்கலை. இவ்வளவு பெரிய வீட்டைப் பூட்டிண்டு போறதும் கஷ்டம். குத்தகைகாரன் வருவான். அவனுக்கு பதில் சொல்லியாகணும். நீ வாணா போயிட்டு வாயேன். எந்தனையோ 'டூரிஸ்ட்' பஸ் போறது."

  

அவள் தன்னிடம் நம்பிக்கையில்லாமல் கணவனைக் கூப்பிட அவன் தட்டிக்கழிக்க, இப்படியே நாட்கள் ஓடின.

  

முன்பு பூரணி இல்லாத நாட்களில் பாலு சர்வ சுதந்திரமாக இந்த வீட்டில் நுழைந்து சாப்பிட்டு விட்டுப் போவான். இந்த தடவை நர்மதா வாசல் கதவை அடைத்தே வைத்திருந்தாள்.

  

'காரணம் உனக்கே தெரியும்' சே! எத்தனை பெரிய வார்த்தை? இவள் புருஷனை இவளுக்குக் கண்டிக்க தைரிய மில்லை. என் பேரில் பழியை போட்டு விட்டுப் போகிறாள். நான் ஒரு நிமிஷத்தில் அவனை என் வலையில் சிக்கவைக்க முடியும்.சே!...

  

பாலு பல இரவுகள் நர்மதாவுக்காகக் காத்திருந்தான். தப்பித் தவறி வரமாட்டாளா?

  

கொல்லைப்பக்கம் அவளைப் பார்த்தால், "சாப்பாடு கிடைக்குமா?" என்று கேட்பான். "ஓ! ராத்திரி எட்டு மணிக்கு அவர் சாப்பிடச்சே வாருங்கோ. போடறேன்"

  

பட்டப்பா வருகிற நேரத்தில் கதவை திறந்து கொண்டு வாசலுக்கு வந்தாள் நர்மதா. தெரு விளக்குகள் எரியவில்லை. நிலவற்ற வானம். பொட் பொட்டென்று மழைத்துளிகள் விழுந்து

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.