கொண்டிருந்தன. பின் பலத்த மழையும் ஆரம்பித்தது. அந்த இருட்டில் நிற்க பயந்து கொண்டு ரேழிக்குள் நுழைந்தாள்.
சட்டென்று யாரோ தாழ்ப்பாள் போட்டார்கள். முரட்டுத்தனமாக அவள் உடலை அணைத்தார்கள்.
பாலு! பாலுதான்!
'அடப்பாவி! காரணம் எனக்கே தெரியும்னு பூரணி சொல்லிட்டுப் போயிருக்காளே. அவளுக்கு துரோகம் பண்ணச்சொல்றியா?"
"இதிலே என்ன துரோகம் இருக்கு? உனக்கு தேவை இருக்கா இல்லையா?''
"தேவை தேவையில்லை என்பதெல்லாம் மனசைப் பொறுத்த விஷயம். என்னைப்போல இன்னொரு பெண்ணை நான் ஏமாத்த விரும்பலே"
பாலு ஒரு மிருகம் போல தோற்றமளித்தான்.
நர்மதா அவன் பிடியிலிருந்து பலமாக விடுபட்டு படுக்கை அறைக்குள் ஓடி தாழ்ப்பாள் போட்டுக்கொண்டாள்.
"கதவைத்திற நர்மதா. இதுவரையில் ஒன்னும் நடக்கலே. நடந்தமாதிரி ஊர்ப் பூரா சொல்லுவேன்"
"சொல்லிக்கோ”
"நிச்சயமாகச் சொல்லிடுவேன். நீ மானத்தோட ஊரில் இருக்கமாட்டே."
வாசற்கதவை யாரோ தட்டினார்கள். பாலு போய்த் திறந்தான் அவசரமாக வெளியே போய்விட்டான். நர்மதா அறையிலிருந்து வெளியே வந்தாள். தேம்பி அழுதபடி பட்டப்பாவிடம் வந்தாள்.