இதற்குள், துரை அண்ணன் சத்தம் கேட்டு, அவள் வீட்டுக்குள் போனாள். ஊஞ்சல் பலகையில் துரை; அவனை உரசியபடி, அவன் தர்ம பத்தினி. அவள், இவளை அதட்டினாள்:
"ஆமா, அவனை எதுக்கு இப்படி அதட்றே? குடிக்க வர்றவன் எதோடு வந்தா ஒனிக்கு என்ன?”
"எக்கோ! ஒனக்கும் எனக்கும் பேச்சு இல்லை. என்ன விஷயம் துரை அண்ணே.”
"கும்மாளம்மனுக்கு விசேஷமாம். கூட்டம் அதிகமா வரும். சரக்கு எடுத்துட்டு வந்திடு."
"இந்தத் தொழிலே இனிமே வேண்டான்னு நினைக்கேண்ணே. மாதச் சம்பளம் கிடைக்கிற ஏதாவது ஒரு வேலையிலே சேரலாம்னு...."
துரை, அவளிடம் பேசப் போனபோது, அவன் தர்மபத்தினி கொதித்தாள். கட்ட நண்டு போல் அவள் முகம் சுருங்கியது. இவளை - இந்த கிழிஞ்சபைஜாமா, கீறல் கையோட பார்க்கறதுக்கு எவ்வளவு சந்தோஷமா இருக்குது.
"இந்தா பாரும்மா, அவர எட்டன்னு நினைக்காதே. தண்ணிக்குள்ளேயே தடம் காணுறவரு அவரு.
"எவரும்மே?"
"ஒனிக்கி, இன்னுந் தெரியலையா? அவருன்னா, அவருதான்; ஒன்னோட அண்ணாத்தே. இந்த பதினஞ்சி நாளா, இந்த சரோசா, எங்கே எங்கே போராள், யாரைப் பார்க்காள்னு அவருக்கு அத்துபடி."
"அவருக்குத் தெரியுமுன்னு ஒனக்கு எப்படிம்மே தெரியும்?"
தர்மபத்தினி, குறுஞ்சிரிப்போடு சிரித்தாள். துரைக்கு, சரோசா, யாரை எல்லாமோ பார்த்தாள் என்பதைவிட, அண்ணன், அந்த சமாச்சாரங்களை தன்னிடம் சொல்லாமல், தனது தர்மபத்தினியிடம் சொன்னதில், ஒரு இஸ்கு-தொஸ்கு இருப்பதை உணர்ந்தான். லேசாய்