(Reading time: 9 - 17 minutes)
Thazhampoo - Su Samuthiram
Thazhampoo - Su Samuthiram

பம்பரமாய் சுற்றுவது போன்ற அவள் உணர்வுச் சுற்றல். அரைக்கண் பார்வையோடு, அப்படியே நின்றாள். முனுசாமி அவளைப் பரிதாபமாகப் பார்த்தபடியே, அதே சமயம் ஒரு சாதனையை நிகழ்த்திக் காட்டிய பெருமிதத்தில் ‘தண்ணிப்பட்டபாடாய்' நடையைக் கட்டினான்.

   

அம்மாவின் ஆணைப்படி பலசரக்குக் கடையிலிருந்து, கால் கிலோ தக்காளியை மறைக்கும்படி கருவேப்பிலை ‘கொசுரை’ கவரில் போட்டுக் கொண்டு வந்த ஆறுமுகப் பயலை, ருக்குமணி, அவன் முதுகைப் பிடித்து வளைத்து, காரணமில்லாமலேயே இரண்டு போடு போட்டாள். சரோசாவின் முன்னால் வந்து அவள் முகத்தையே பார்த்தாள். அவள் தோளைப் பிடித்து உலுக்கினாள். அப்படியும் சரோசாவின் கண்கள் அங்குமிங்கும் சுழலாமல் நின்ற இடத்திலேயே நிலைத்திருப்பதைப் பார்த்து, அவள் தலையைப் பிடித்துக் குலுக்கிக்கொண்டே கேட்டாள்:

   

"ஒன்ன, கடாவ வளக்கது மாதிரிதான் வளர்த்துருக்காங்கமே. ஒனிக்கி நாய்க்கி தீனி போடறதுமாதிரிதான் போட்டுருக்காங்கமே. நாய்க்கி வெறி வந்தா அத வளர்க்கிறவன் மருந்துபோட்டு காப்பாத்தறான். ஆனாங்காட்டி, கையாளுக்குப் புத்தி வந்தா, அதோட எசமான் கொலை கூட செய்வான். இப்பவாவது ஒனக்கு புரியுதாமே? ஏம்மே பேச மாட்டேங்குற?"

   

பூக்கார ருக்குமணி சொல்லச் சொல்ல, சரோசா அகலமாய் கிடந்த கண்களை ஆழப்படுத்தி, அப்படியே நின்றாள். ருக்குமணி, தக்காளிகளை எடுத்து தன்மீது எறிந்து கொண்டிருந்த மகனைப் பற்றி பிரக்ஞை இல்லாமலே, சரோசாவின் பிரச்சினைக்கு விடை கண்டவள் போல் அவள் தோளில் கை போட்டபடி, உபதேசித்தாள்.

   

"விட்டுத்தள்ளு கஸ்மாலத்த, இதுவும் நல்லதுக்குத்தான். ஒன்கிட்டே விசாரிக்காமலே குழி பறித்தான் பாரு கஸ்மாலம் அண்ணாத்தே... அவன் வாடையே வாணாம். பேசாம இளங்கோ சாரு சொல்ற வேலைல சேர்ந்திடு. இன்னாமே! நானு பேசிக்கினே போறேன், நீ சொம்மாவே நின்னா இன்னா அர்த்தம்?”

   

சரோசா, இன்னும் அசைந்து கொடுக்காமல் இருப்பதைப் பார்த்த ருக்குமணிக்கு லேசாகப் பயம் பிடித்தது. இதற்குள் ஆறுமுகப்பயல் அம்மாமேல் குறிவைத்த ஒரு அழுகிய தக்காளி, சரோசாவின் நடுமூக்கில் பட்டு இரண்டு கண்களிலும் சிதறியதால் அவள் சுயவுணர்வுக்கு வந்தாள். ஆனாலும், தலையில் கைவைத்தபடியே, அந்த வீட்டின் இற்றுப்போன கதவில் 

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.