(Reading time: 6 - 12 minutes)
Vasantha Kokilam - Vaduvoor K Duraisamy Iyengar
Vasantha Kokilam - Vaduvoor K Duraisamy Iyengar

உவப்பெயர் தினேனே ஓகோவின்பமே!

   

மாத :

   

பாவம் போக்கிடும் இடமே இது,

   

தவம் புரிந்தோமோ யாமிங்கேகவே!

   

ஸோமே ; அதோ கல்மேடை இருக்கிறது. அதில் கொஞ்சம் உட்கார்ந்து கொள்ளுங்கள். நேற்றிரவு எல்லாம் உங்களுடைய தேகம் அஸெளக்கியமாய் இருந்தது அல்லவா? ஆகையால் உட்கார்ந்து சிரம பரிகாரம் செய்து கொள்ளுங்கள். ஆகா அந்த வஸந்தஸேனையின் குணமே குணம் தங்கள் பொருட்டு அவள் எவ்வளவு பாடுபட்டாள். இரவு முழுதும் அவளுக்கு நித்திரையே இல்லையே!

   

மாத : (முகம் மாறுகிறது) நாம் காலையில் இங்கு வருவதற்குப் புறப்பட்ட பொழுது அவள் அலுத்து நித்திரை செய்து கொண்டிருந்தாள். அவளை எழுப்பாமலும் அவளிடம் சொல்லிக் கொள்ளாமலும் வந்து விட்டேன். அவள் எழுந்திருந்து என்னைப் பற்றி எவ்விதமான எண்ணம் கொள்வாளோ தெரியவில்லை. விருந்தாக நமது மாளிகைக்கு வந்திருக்கும் அவளை நாம் அலட்சியம் செய்து வந்து விட்டோம் என்று நினைப்பாளோ? கூடிய சீக்கிரம் வந்து விடுவதாயும், அதற்குமுன் அவள் போக வேண்டு மென்றால், அவளை நமது பெட்டி வண்டியில் வைத்து இவ்விடம் அழைத்து வரும்படியாகவும் சொல்லி விட்டு வந்தேன். நேரமாகிறது நாம் வீட்டிற்குப் போகலாம். அவள் ஒருவேளை நமது வரவை எதிர்பார்த்துக் கொண்டிருப்பாள்.

   

ஸோமே : அதோ பார்த்தீர்களா? நமது பெட்டி வண்டி வருவதை?

   

மாத: ஆம்! ஆம்! அவளே இங்கு வந்து விட்டாள். வந்ததற்குப் பலனாக இந்த உத்தியானவனத்தைப் பார்த்துக் கொஞ்ச நேரம் சுகமாய் இருந்து விட்டுப் போகட்டும். (தனக்குள்) இவளுடைய எண்ணம் நிறைவேறப் போகிறதில்லை. நான் என்ன செய்வேன்? பதிவிரதா சிரோன்மணியாகிய என் மனைவி கோகிலத்தின் மனத்தில் விசனம் உண்டானால் 

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.