Page 1 of 24
Flexi Classics தொடர்கதை - வஸந்த கோகிலம் - 08 - வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார்
இடம் : உத்தியான வனத்திற்குச் சமீபத்தில் இருந்த அரசனுடைய சோலை.
மகிபாலன் காஷாயம் பெற்றுச் சந்நியாசியாக வருகிறான்.
காலம் : மேற்படி காலை.
மகி : (தனக்குள்)
பண் செஞ்சுருட்டி – ஆதி
1. தலையே! நீ வணங்காய் தலை-மாலை தலைக்கணிந்து
தலையாலே பலிதேருந் தலைவனைத் தலையேநீ வணங்காய் (த)
2. கண்காள் காண்மின்களோ கடல் நஞ்சுண்ட கண்டன்றன்னை
எண்டோள் வீசிநின் றாடும்பிரான்றன்னைக் (கண்)
3. செவிகாள் கேண்மின்களோ - சிவன் எம்மிறை செம்பவளம்
எரிடோல் மேனிப்பிரான் றிறமெப்போதும் (செ)
4. வாயே வாழ்த்து கண்டாய்-மத யானை யுரிபோர்த்துப்
பேய் வாழ் காட்டகத்தாடும் பிரான்றன்னை (வா)
5. கைகால் கூப்பித் தொழீர் கடிமாமலர் தூவிநின்று
பைவாய் பாம்பரை யாத்தபரமனைக் (கை)