(Reading time: 32 - 63 minutes)
Vata malli
Vata malli

தலையிலிருந்து பிய்த்தெடுத்தாள். அப்போது தான் வந்த தம்பியைப் பார்த்து, “என்மவனே பிள்ளையாரே... ஆத்தாளுக்குக் கற்பூரம் கொளுத்துடா” என்றாள் அந்த அக்கா.

  

பிள்ளையார், ஒரு கட்டி கற்பூரத்தையும் வெற்றிலையில் வைத்துக் கொளுத்தினார். ஜோதியாய் எரிந்த அதை, பூவம்மா, வெறுங்கையால் தூக்கித் தாம்பாளத்தில் வைத்தாள். அதைக் கையில் ஏந்திக்கொண்டே அதட்டினாள்.

  

ஏய் சீதாலட்சுமி. என்னோட காவலுக்குள்ளேயே நீ எப்படிடி வரலாம்? மரியாதியாய் ஓடுறியா.இல்ல, ஒன்ன பாதாளக் குகைக்குள்ள பிடிச்சுப் போடணுமா... சரி, சரி, கேட்கிறத கேட்டு, வாங்குறத வாங்கிக்கிட்டு பேசாம போ! ஒனக்கு என்ன வேணும் சொல்லுடி! நீ பேயாப் போனாலும், நீயும் என் மகள்தாண்டி. ஒன் தாய்கிட்ட கேள் மகளே.”

  

சுயம்புவுக்குத் துக்கம் குறைந்து, மகிழ்ச்சி ஏற்பட்டது. முதல் தடவையாக தன்னை ‘டி’ போட்டும், மகள் என்றும் அழைத்த அத்தையைப் பார்த்து, லேசாய்ச் சிரித்தான். வெள்ளையம்மா அதட்டினாள்.

  

இப்படி சிரிச்சா சீரழிஞ்சு போவே மகளே! சீக்கிரமா கேட்டுட்டு சீக்கிரமா போ. உனக்கு என்ன வேணும்டி...”

  

சுயம்பு சுயமாகவே பதிலளித்தாள்.

  

சேல வேணும்... சேல வேணும்... டேவிட் போட்ட வெளிர் மஞ்சள் துண்டுமாதிரி நிறத்துல சேல இருக்கணும். ஜாக்கெட்... வெள்ளை உள்பாடி, பாவாடை. ஏழெட்டு வளையலு, குங்குமம்...”

  

சரி. இப்பவே ஓப்டிப்போ... நீ கேட்டது எல்லாம் அடுத்த செவ்வாக்கிழமை உச்சி காலத்துல ஒன் வீடு தேடி வரும்.”

  

பூவம்மா, செம்புத்தண்ணி, செம்புத்தண்ணி என்று கத்த அந்த கத்தல் முடியுமுன்பே, மரகதம் செம்பும் கையுமாக வந்தாள். அதை வாங்கிக்கொண்ட பூவம்மா சுயம்புவின் முகத்தில் செம்பையும் சேர்த்து மூன்று தடவை வீசியடித்தாள். அவ்வளவு உக்ரம். பிறகு நெற்றியில்

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.