(Reading time: 10 - 20 minutes)

ந்த அக்காவோ "சரி, உங்கள் இரண்டு பேருக்கும் சாப்பாடு தருகிறேன் ஆனால் ரெண்டே நிமிஷத்தில் சாப்பிட்டு விட்டு உடனே திரும்பச் சென்று விட வேண்டும்" என்றுக் கூறினாள்.சாப்பாடு கிடைக்கப் போகும் மகிழ்ச்சியில் கொஞ்சம் உற்சாகமான ராஜூ,"அக்கா உங்க வீட்டில ஏதாவது விசேஷமா இவ்வளவு பெரிய பாத்திரங்களில் சமைக்கிறீங்களே ?"என்று கேட்டான். அதற்கு அந்த அக்கா "விசேஷம் ஒன்றுமில்லை" என்று கூறினாள்.

ஆனால் தனக்குள்ளே, "இது என் அப்பாவிற்கான ஒரு வேளைச் சாப்பாடு. நானே என் அப்பாவை எப்படியோ சைவ சாப்பாடு சாப்பிட வைக்க முயன்று மாற்றியிருக்கிறேன். இரண்டு நிமிடத்தில் அப்பா வரும் முன் இவர்கள் போய் விட்டால் நல்லது இல்லையென்றால் இவர்கள் உயிருக்கு என்ன உத்தரவாதம் இருக்கு" என்று முனகியவாறு சாப்பாடு கொடுத்தாள். 

வர்கள் அவசர அவசரமாக சாப்பிட்டாலும் கூட அதற்குள் தரை அதிர யாரோ வரும் சப்தம் கேட்டதும் அந்த அக்கா அவர்களை வீட்டின் மாடியில் போய் இருக்கச் சொல்லி அவசரப் படுத்தினாள்.அங்கு வந்துக் கொண்டு இருந்ததோ ஒரு மிகப் பெரிய ராட்சதன்.

" ஐயோ இந்த அக்காவின் அப்பா ஒரு ராட்சதன் என்று தெரியாமல் இங்கே வந்து மாட்டிக் கொண்டேனே" என்று சின்னு புலம்பிக் கொண்டு மாடியில் அவசரமாக ஏறியது. ராஜூவுக்கோ என்ன செய்வது என்றே புரியவில்லை. இருவரும் மாடியில் போய் இருக்கவும் ராட்சதன் சாப்பிட அமர்வதும், அவன் மகள் அவனுக்கு சாப்பாடு பறிமாறுவதும் இவர்களுக்கு கேட்டுக் கொண்டு இருந்தது.

ராட்சதன் தன் மகளிடம் பாப்பா இங்கே வேறு யாராவது வந்துச் சென்றார்களா? எனக்கு வித்தியாசமான வாடை வருகின்றதே?! எனக் கேட்டான். அவன் மகள் நல்லவளாகையால் இருவரையும் காப்பாற்ற எண்ணி இல்லையப்பா யாரும் வரவில்லை என்று கூறினாள்.

இதைக் கேட்ட சின்னுவிற்கு பயத்தில் ஒன் பாத் ரூம் வந்திடுச்சி ( ச்ச் ..சீ) அவர்கள் இருந்த மச்சு வீடு மரப் பலகையால செய்து இருந்தால் லீக் ஆகி உடனே கீழே விழ ஆரம்பிடுச்சி.அதைப் பார்த்த அந்த ராட்சதனுக்கு இப்போது தன் வீட்டு மச்சியில் யாரோ இருப்பது உறுதி ஆகிவிட்டது. கோபத்தில் எழுந்தவன் உரக்க சப்தம் எழுப்பி அழைத்து " யாரடா அது என் வீட்டின் உள்ளே வந்து இருப்பது? என்று கேட்டது. அதன் குரலில் காடே அதிர்ந்தது என்றால் இவர்கள் நிலையை கேட்கவே வேண்டாம்.

ந்த மச்சு வீட்டின் சாளரம் திறந்து இருந்தது, சின்னு தன் உயிரைக் காத்துக் கொள்ள எண்ணி ராஜூவை விட்டு விட்டு அதன் வழியாக தப்பித்துச் சென்று விட்டது.அப்போது தான் ராஜூவிற்க்கு தன் அம்மா பேச்சை கேட்காதது எவ்வளவு தவறு என்று புரிந்தது. சின்னுவை நம்பி வந்தோமே, அது சொன்னது எல்லாம் கேட்டோமே, ஆனால் அது நம் துன்பத்தில் நம்மை விட்டு சென்று விட்டதே என திகைத்து நின்றான்.

ராட்சதனின் குரல் மேலும் மேலும் உயர்ந்தது.

" நீ கீழே வருகிறாயா? இல்லை நான் மேலே வரட்டுமா? என கேட்டது.ராஜூ சற்றுத் துணிவை வரவழைத்துக் கொண்டவனாக தன் அம்மா சொல்லித் தந்த கதைகளை நினைவுக்கு கொண்டு வந்து புத்திசாலித்தனமாக செயல்பட முடிவெடுத்தான்.முதலில் அட்டைத்தாளைச் சுருட்டி தன் வாயில் வைத்து பேசத் தொடங்கினான்.

" நான் யார் தெரியுமா? உன்னை விட பெரிய ராட்சதன் ஹா ஹா ஹா" என உரக்க கூறினான். அட்டையின் காரணமாக அவன் குரல் மிகவும் தடித்துக் கேட்டது.

ராட்சதனோ," என்னை விட பெரிய ராட்சதன் இந்த காட்டிலேயே கிடையாது. என்னடா பொய் சொல்கிறாயா? எனக் கேட்டான். 

ராஜீவோ," நான் பொய் சொல்லவில்லை என்பதற்க்கு சான்றாக என் வாலை மட்டும் கீழே போடுகிறேன் பார்த்து என்னைக் குறித்து தெரிந்துக் கொள்" என்றுச் சொல்லி அந்த தடிக் கயிறை கீழே தொங்க விட்டான். அதைப் பார்த்த ராட்சதன் மிரண்டு விட்டான். இவ்வளவு பருமனான நீள வாலா? நிச்சயமாக இவன் பெரிய ராட்சதனாக இருப்பானோ?! என்று நினைத்துக் கொண்டாலும், தன் தோல்வியை ஒத்துக் கொள்ள எண்ணம் இல்லாதவனாக,

" நான் ஒன்றும் உன் வாலைப் பார்த்து நம்பவில்லை உன்னைக் குறித்த வேறு ஏதாவது விஷயம் இருந்தால் சொல், நம்ப இயலுமா என பார்க்கிறேன்" என்றான். .

ராஜூவோ, "இதோ பார் என் தலையில் இருக்கும் பேன் ஒன்றை எடுத்து உனக்கு காண்பிக்கின்றேன்"என்றுச் சொல்லி பன்றிக் குட்டியை படியில் இறக்கி விட்டான். அதைப் பார்த்த ராட்சதன் தலையில் உள்ள பேன் இவ்வளவு பெரிது என்றால் எதிராளியின் தலை எவ்வளவு பெரிதாக இருக்கும் என்று எண்ணி மிரண்டவனாக தன் வீட்டை விட்டு ஓட்டம் பிடித்தான்.

அவன் வெகு தூரம் சென்றது அறிந்து மச்சியிலிருந்து கீழே இறங்கிய ராஜூ தன் உயிரைக் காப்பாற்றிய அக்காவிற்கு நன்றிச் சொல்லி விட்டு அங்கிருந்து புறப்பட்டுச் சென்றான். திரும்பிச் செல்ல வழியும் அவனுக்கு ஞாபகம் இல்லாத நிலையில் பயந்தவாறே பிறரிடம் வழிக் கேட்டு மிக சிரமங்களுக்குப் பின்னர் வீட்டிற்கு வந்துச் சேர்ந்தான்.

ப்போது அம்மா அவனுக்காக கவலையோடு பார்த்துக் கொண்டிருப்பதை கண்டு அம்மாவிடம் விரைந்தான்.

"ராஜூ எங்கேடா போயிருந்த?, அம்மா உன்னை ரொம்ப நேரமா தேடுனேன்.. எனும் அம்மாவின் கவலையான பேச்சைக் கேட்டு ஓடிச் சென்று அருகமர்ந்தான்.

"அம்மா நான் இனிமேல் உன் சொல் கேட்டு நடப்பேன், நீ போக வேணான்னு சொல்ற இடத்துக்கு போக மாட்டேம்மா" என்று சொன்னவனை உச்சி முகர்ந்து தன்னோடு அணைத்துக் கொண்டார் அம்மா.

{kunena_discuss:875}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.