(Reading time: 4 - 8 minutes)

சிறுகதை - இளவரசியும், தோழியும் - தனுஜா

Heart

ந்திர குபேரபுரி என்னும் அந்த சின்ன நாட்டை ஆண்டு வந்த ராஜாவிற்கு ஒரு மகள். அந்த மகளுக்கு ஒரு தோழி. தோழிக்கும் இளவரசிக்கும் ஒரு ஒற்றுமை  பார்ப்பதற்கு இளவரசி ரம்பை போல், தோழி ஊர்வசி போல். இளவரசிக்குக் கிடைத்த அனைத்துமே தோழிக்கும் கிடைக்கும் அந்த அரண்மனையில். ஒற்றுமையினால் இருவரும் தோழிகள் ஆனார்கள், பிறப்பாலான  வேறுபாட்டினால் ஒருத்தி இளவரசி ஆனாள், இன்னொருத்தி தோழி ஆனாள்.

 அரண்மனையில் இருந்த சிலப்பல நாரதத் தோழிகளின் தந்திரமான திட்டத்தால்  இளவரசியின் தோழிக்கு விழுந்தது மனதில் ஒரு நிரந்திர வெட்டு, இந்த அரண்மனையில், தான் இரண்டாம் பட்சம் தானோ என்ற எண்ணம். வெளியே மட்டும் பொய்ச் சிரிப்பை வெளிப்படுத்திக் கொண்டு இளவரசியுடன் பழக அரம்பித்தாள்.

இளவரசிக்குத் திருமணம் செய்ய நினைத்த மன்னன், சுயம்வரத்திற்கு முன்பு இளவரசியின் உருவத்தை வரைந்து அனைத்து நாட்டு இளவரசர்களுக்கு அனுப்ப முடிவு செயதார். இளவரசியை வரைய ஒரு ஓவியர் அரண்மனைக்கு அழைத்து வரப்பட்டார்.

ஓவியரை கண்டதும் இளவரசி காதல் கொண்டாள். ஒரு தலை காதல் பாரம் தாங்காமல்  காலம் தாழ்த்தாமல் இளவரசி தன் காதலை ஓவியரிடம் சொல்ல, ஓவியரும் ஓரிரு நாட்களில்  சம்மதம் தெரிவித்தார். தன் காதலை இளவரசி தோழியிடம் சொல்ல, அவளோ வெளியே மகிழ்ச்சியையும், உள்ளே பொறுமியும், தனக்குக் கிடைக்காத ஒன்று இளவரசிக்கும் கிடைக்கக் கூடாது என்று முடிவு கட்டினாள்.

ஒரு மாலை வேளையில் ஓவியரும் இளவரசியும் அந்தப்புரத்தில் ஓவியம் வரைவது போல் காதலித்துக் கொண்டிருந்தனர்.  தோழி மன்னரிடம் அதை சொல்லாமல் சொல்ல, மன்னனும் அந்தப்புரத்தில் இருவரும் ஒன்றாக இருப்பதைப் பார்த்துக் கோபமடைந்து உடனே ஓவியருக்கு ஒரு மாத சிறை தண்டனையும், அது கழித்தப் பின்னர் மரண தண்டனையும் விதித்தார். இளவரசி ஏதும் சொல்வத்றகு முன் ஓவியர் சிறையில் அடைக்கப் பட்டார்.

இப்போது தோழி ஓவியரைத் தன்வசப் படச்செய்ய நினைத்தாள். ஓவியர் சிறையில் இருக்கும் போது தோழி பல முறை ஓவியரைச் சந்தித்து தன்னைக் காதலிக்கும் படி சொன்னாள், மேலும் அப்படி காதலித்தால் மரண தண்டனையிலிருந்து தப்ப முடியும் என்றும் சொன்னாள். இதற்கு ஒரு போதும் மயங்காத ஓவியர் மரண தண்டனையை ஏற்றுக் கொள்ளத் தயாரானார். ஓவியரைச் சம்மதிக்க வைக்க முடியாமல் போக, தோழி தனது திட்டத்தை மாற்றினாள். தனக்குக் கிடைக்காத ஏதும் இளவரசிக்கும் கிடைக்கக் கூடாதென்பதில் உறுதியாக நின்றாள். மன்னரிடம் பேசி தண்டனையை மாற்றி அமைத்தாள்.

தண்டனைக்கான நாளும் வந்தது.

தனக்கு  தண்டனை மாற்றப் பட்டது என்பது மட்டுமே தெரியுமே தவிர என்ன தண்டனை என்று அவருக்கு தெரியாது. ஓவியர் சிறையிலிருந்து வரவழைக்கப்பட்டு அவர் முன் இருக்கும் இரண்டு அறைகளில் ஒன்றைத் திறந்து உள்ளே செல்ல வேண்டும் என்பது தான் தண்டனை.

தண்டனை என்னவென்று மன்னருக்கும், இளவரசிக்கும், தோழிக்கும் மட்டுமே தெரியும்.

ஒரு அறையில் பசியுடன் கூடிய சிங்கமும், மற்றொரு அறையில் தோழியும் இருந்தார்கள். ஓவியர் சிங்கமிருக்கும் அறையைத் திறந்தால், சிங்கத்துடன் சண்டையிட்டு வென்றால் இளவரசியைத் திருமணம் புரியலாம், ஒரு வேளை தோழி இருக்கும் அறையைத் திறந்தால், தோழியை மணக்க வேண்டும்.

இளவரசி காதலனையும் தோழியையும் காப்பாற்ற முடிவு செய்தாள். கலைகளில் சிறந்தவன் காதலன் வீரத்திலும் சிறந்தவன் என்றால் அவர்களுக்கும் நாட்டிற்கு எதிர்காலம் இருக்கு.  இல்லை குறைந்தபட்சம் தோழிக்கு நல்ல வாழ்விற்கு காலம் இருக்கு என்ற மகிழ்ச்சி இருக்கு.

இது ஏதும் தெரியாமல் ஓவியர் கம்பிகளால் அடைக்கப்பட்ட கூண்டில் இரண்டு அறைகளுக்கு முன்னால் நின்றுக் கொண்டிருந்தார். கூண்டிற்கு வெளியே இடது புறம் மன்னன் தனது ஆசனத்தில் அமர்ந்திருந்தார். அவர் அருகே இளவரசி ஓவியரின் கவனத்தைத் தன் பக்கம் இழுக்க சைகை செய்துக் கொண்டிருந்தாள். ஓவியர் அறைகளின் முன் நின்று கொண்டு, இளவரசியை ஒரு முறை பார்த்தார். இளவரசி சைகை செய்தாள். ஓவியரின் உள்ளத்தில் மகிழ்ச்சி, முன் சென்று அந்த அறையைத் திறந்தார்.

பொறாமையை, அறிவீலனான அரசனை, தூய்மையான நட்பை,  காதலை, மரணம் வென்றது.

{kunena_discuss:785}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.