(Reading time: 13 - 25 minutes)

சிறுகதை - ஒரு துளி - பூர்ணிமா செண்பகமூர்த்தி

kidPlay

"ன்னும் கொஞ்சம் கொத்தமல்லிச்சட்னி வச்சிக்கோ அஸ்வின்!" அம்ருதா சொல்ல,

அதைக் கவனிக்காமல் கையில் இருந்த ஸ்மார்ட்போனைத் தட்டிக் கொண்டு இருந்தான் அஸ்வின்.

"என்னங்க! அவன் கையில இருந்து உங்க போனை முதல்ல வாங்குங்க!" என்று தன கணவன் ராமை இடித்தாள் அம்ருதா.

ராம் புன்னகைத்துக்கொண்டே, அஸ்வினைப் பார்க்க, அவனோ போனில் இருந்து கண்ணை எடுக்கவில்லை. ஒரு கை தனது தட்டில் இருந்த மசாலா தோசையைப் பிய்த்துக்கொண்டு இருக்க, மறுகை போனில் தான் இருந்தது.

"இதப் பாருங்க ராம்! குடும்பத்தோட நேரம் செலவழிக்கத் தான் ஞாயிற்றுக்கிழமைல இப்படி ஒண்ணா வெளில கிளம்பி வந்திருக்கோம். அந்நேரமும் போனை நோண்டிட்டு இருக்கணுமா?"

ஸ்மார்ட்போன் சிணுங்கியது. "தென்பாண்டித் தமிழே என் சிங்காரக் குயிலே"

"அப்பா! ரேவதி அத்தை கால் பண்றாங்கப்பா!இந்தாங்க!"

போனை ராமின் கையில் கொடுத்தான் அஸ்வின்.

"நல்லா இருக்கோம்! சாப்பிட்டுகிட்டே இருக்கோம்!"

"அன்னதானத்துக்கு எல்லா ஏற்பாடும் நீ சொன்ன மாதிரியே பண்ணியாச்சும்மா! மாப்பிள்ளைகிட்டயும் நினைவுபடுத்திரு!"

"அஸ்வின் உன்கிட்ட ரேணு பேசணும்னு சொல்றாலாம்! பேசு!" ராம் போனை நீட்ட

அஸ்வின் ராமிடம் இருந்து போனை வாங்கிப் பேசத் தொடங்கினான். அவன் அத்தை பெண் ரேணுவிடம் வீடியோ கேம்ஸ் பற்றி தான் பேசினான்.

"ஆமா ரேணு. இப்போ அந்த கேம்ல லெவல் 152 ல இருக்கேன்"

"சாயங்காலமா அன்லாக் கோட் அனுப்புறியா?"

"சரி அனுப்புறேன்"

"இரு! இரு! ஒரு நிமிஷம்! இப்ப கோட் பார்த்து மெசேஜ் பண்றேன்"

பேசிக்கொண்டே எழுந்து சென்று விட்டான்.

அம்ருதா எழுந்து கைகழுவச் சென்றாள். புன்னகையுடன் வந்த சர்வர், எல்லாத் தட்டுகளையும் எடுத்துச் சென்றுவிட்டார்.

போன் பேசி முடித்த வந்த அஸ்வின் சிறிது அதிர்ச்சியுடன்,

"என்ன தட்டெல்லாம் எடுத்துட்டுப் போயிட்டாரா?"

"ஏண்டா?" என்றார் ராம்.

"தோசையும் கொஞ்சம் இன்னும் இருந்தது. நான் மெதுவடையைக் கடைசியில் சாப்பிடலாம் என்று வைத்திருந்தேன். அதுக்குள்ளே எடுத்துட்டுப் போயிட்டாரே?'

அம்ருதா வரவும் ,

"என்ன அஸ்வின்?" என்றாள்.

"சாப்பிட்டு முடிக்கறதுக்குள்ள தட்டை எடுத்துட்டுப் போய்ட்டார்மா சர்வர் அண்ணன்!" என்றான்.

"எந்த சர்வர்னு தெரியுமாங்க!"

"விடு அம்ருதா! திரும்ப ஆர்டர் பண்ணிக்கலாம்! ராம் சொல்ல

"அதெப்படிங்க, ஏற்கனவே தோசைக்கும், வடைக்கும் காசு கொடுத்துத்தானே வாங்கி இருக்கோம்!"

"அந்த சர்வர் யார்னு சொல்லுங்க நீங்க முதல்ல!"

"அதோ காபி எடுத்துட்டு வர்றார் பாரு!"

சர்வர் அருகில் வர, "என்ன அண்ணா நீங்க! சாப்பிடறதுக்குள்ள தட்டை எடுத்துட்டுப் போயிட்டீங்களே!"

"என் பையன் தோசையை சாப்பிட்டு முடிக்கல. வடையையும் அப்படியே வச்சிருந்தான்!"

"சாரி மேடம். பிடிக்கலன்னு வச்சிட்டாருன்னு நினைச்சு எடுத்துட்டுப் போயிட்டேன்!வேணும்னா இன்னொரு ப்ளேட் கொண்டு வரேன்!"

"நீங்க எடுத்துட்டுப் போன தட்டில் இருந்ததை என்ன பண்ணீங்க?'

"உள்ளே இருக்கு மேடம்!"

"அதைக் கொண்டு வாங்க!"

"மேடம்!" என்று சர்வர் சொல்கையில்

அஸ்வின் குறுக்கிட்டு, வேண்டாம்மா எனக்குப் போதும்!வாங்க போலாம்!அப்பா சொல்லுங்கப்பா!

"நோ அஸ்வின், நீ சாப்பிடணும்னுதானே வாங்கின. சாப்பிடு, நீ சாப்பிட்டு வச்சதுதானே!"

"மேடம் வேற வேணா கொண்டு வர்றேன் மேடம்! பணம் கூட தர வேண்டாம்!"

"அதெல்லாம் வேணாம் சார். அதே தட்டைக் கொண்டுவாங்க!"

சர்வர் உள்ளே சென்றார்.

ஏம்மா இப்படி? சொல்லுங்கப்பா நீங்க!

அம்ருதா விடு. பாரு எல்லாரும் நம்மளைப் பார்க்கிறாங்க.

நீங்க சும்மா இருங்க ராம்!. அஸ்வின் சாப்பிடுப்பா! என்றாள் அழுத்தமாக.

அம்மா வேண்டாம்னு சொல்றேன்லமா என்று மறுக்கவும்,

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.