(Reading time: 14 - 28 minutes)

ராம் தன் சிறு வயதிலிருந்து பாட்டியால் அனுபவித்த கொடுமைகளை ஒன்றன் பின் ஒன்றாக பிளாஷ்பேக்கில் ஓட்டிப் பார்த்தான்... தன் ஆறு வயதில் மார்கழி மாதம் நடு ராத்திரி மூன்று மணிக்கு எழுப்பி குளிக்க வைத்து கோவிலுக்கு அனுப்பியதில் ஆரம்பித்து கடைசியாக வேலைக்காக அவன் ஊர் விட்டு வருவதற்கு முன் தன்னை கிரிக்கெட் பார்க்க விடாமல் ஏதோ கதாகாலட்சேபம் சத்தமாக வைத்து பார்த்தது வரை அனைத்தும் கண் முன் வந்து போனது....

Swiss வந்து அங்கு தன்னுடன் வேலை பார்த்த க்ளாடியாவுடன் காதல் ஏற்பட்டு அதைக் கல்யாணத்தில் முடிப்பதற்குள் தானும் தன் அன்னையும் பட்ட பாட்டை நினைத்து அவனுக்கு அப்பொழுதும் அல்லு விட்டது.... ஆவ் இந்த முறை கிழவி என்னென்ன செய்யக் காத்திருக்கிறதோ என்று கலவரமானான் ராம்....

“ஹே ராம் பேபி.... Love you so much.... சீக்கிரமே போய்ட்ட நீ?”, ராமைக் கொஞ்சியபடியே வீட்டிற்குள் நுழைந்தாள் க்ளாடியா.

“செல்லம் உனக்குத்தான் தமில் வரலையே அதை விட்டுடேன்.... நீ பேசற தமில் கேட்டு நிஜமாவே நான் போய் சேர்ந்துடுவேன் போல.... அது போய்ட்ட இல்லை வந்துட்ட....”

“oops sorry sorry... வன்ட்ட நீ?”

“இதுக்கு உன்னோட போயட்டவே பரவாயில்லை...”

“why ராம்.... நீ வாரம்பொது நான் தூக்கமா இருந்துச்சு...” (மக்களே என் தமிழில் பிழை இல்லை... ஒரு swiss பொண்ணால இந்த அளவுக்குத்தான் குறைந்த நாள்ல தமிழ் பேச முடியுமாம்... க்ளாடியா சொல்றாங்க... so குத்து மதிப்பா அவங்க பேசறதை புரிஞ்சுக்கோங்க...)

“மம்மி என்னால மிடில.... என்ன சொல்ல வர்ற....”

“Very bad ராம்.... கல்லாணம் பண்ணி 6 மேதம் ஆச்சு.... ஸ்டில் நாக்கு தமில் புரில....(கல்யாணம் ஆகி 6 மாதமாகியும் நான் பேசற தமிழ் புரியலையா மட்டி மடையா.... மட்டி மடையா என்னோட எக்ஸ்ட்ரா fitting ஹீஹி...)”

“நீ பேசற தமிழ் கேட்டு எனக்குத்தான் நாக்குத் தள்ளுது....”

“ப்ச் OK Leave it... நீ ஏன் தூக்கமா இருந்துச்சு....”

“தூக்கமாவா???? நான் எப்போ தூங்கினேன்...”

“Yes you were very sad....”

“ஓ துக்கமாவா.... அம்மா போன் பண்ணி இருந்தாங்க....  பாட்டி swiss வர்றாங்களாம்....”, ஆதியோடந்தமாக அவனின் பாட்டியின் வருகையைப் பற்றி சொன்னான் ராம்... க்ளாடியா கல்யாணத்தின் போது அந்தப் பாட்டியைப் பார்த்ததுடன் சரி... பாட்டி அந்தக் கால பானுமதி போல அதிகார தோரணையுடன் இருக்கும் உருவம்... க்ளாடியா வீட்டு மனிதர்களை கல்யாணத்தில் ஒரு வழி செய்து விட்டார்... அப்பொழுதானும் தன்னுடன் சமாளிக்க மாமியார் இருந்தார்... இப்பொழுது தனியாக மாட்டிக் கொண்டோமே என்று தானும் கவலை கொள்ள ஆரம்பித்தாள் க்ளாடியா....

“so sorry baby... பாட்டி வர்றதை சொல்லி உன்னையும் கலவரப்படுத்திட்டேனா...”

“No No ராம்... But இதை எப்படி Face பண்ண போறோம்...”

“ஹ்ம்ம் அதுதான் புரியலை.... சரி அம்மா, நீ வந்தவுடனே பேச சொன்னாங்க... பேசறியா....”

“Sure Sure I’ll call her now... நீ ஸ்பீக்கர் போடுது.... two பேரும் பேஸ்லாம்...”

“Hello Mom.... நான் எப்படி இருக்க... நீ நல்லா இருக்கன்...”

“நான் நல்லா இருக்கேன்.... நீ எப்படிடா கண்ணா இருக்க...”

“ஆ அம்மா சூப்பர் போ... காதலிச்சு கல்யாணம் பண்ணின எனக்கே அவ பேசறது புரியலை... உனக்கு மட்டும் எப்படிம்மா டக்குன்னு புரியுது....”

“என்னோட பேசணும் அப்படின்னே கஷ்டப்பட்டு தமிழ் கத்துட்டு பேசறா... அதைப் பாராட்டாம கிண்டல் பண்றியா நீ... எவ்ளோ அழகா இருக்கு என் மருமகளோட தமிழ்....”

“அழகா இருக்கா...அவ எப்போ பேசினாலும் எனக்கு சௌகார்பேட்டை சேட்டு வீட்டுல இருக்கறா மாதிரியே feel வருது....”

“போடா போடா போக்கத்தவனே.... இவ்ளோ வாய் பேசற நீ அவளோட பிரெஞ்சு கத்துட்டு பேச வேண்டியதுதானே... அதுக்கு துப்பு இல்லை... என் மருமகளை கிண்டல் பண்ண வந்துட்ட....”

“மாம் சாண்டி(சண்டை) no... ராம் பேவம்(பாவம்).... Leave him....”

“பார்த்தியா உனக்கு எப்படி பரிஞ்சுட்டு வர்றான்னு... இனியானும் அவளை கிண்டல் பண்ணாத....”

“சரிம்மா சரி... உன் மருமகளை ஒண்ணும் சொல்லல... இப்போ பாட்டிய எப்படி சமாளிக்கறதுன்னு சொல்லு...”

“உங்க பாட்டி மயங்கற ஒரே விஷயம் சாப்பாடுதான்... நான் அவங்களை பலநேரம் கவுக்கறதே அவங்களுக்கு பிடிச்சதை சமைச்சு போட்டுத்தான்....  பாட்டி வர்ற சமயம் தமிழ் வருஷப்பிறப்பு வேற வருது... அவங்களுக்கு பிடிச்ச பலாப்பழ பாயசமும், மாங்காய் பச்சடியும் பண்ணிடு.... அப்பறம் பாரு அவங்க மருமகளைக் கொண்டாடுறதை...”

“ஏம்மா உனக்குப் பாட்டியை பிடிக்காதுன்னு தெரியும்... அதுக்காக அவங்களை போட்டுத் தள்ற அளவுக்கு போவேன்னு நினைக்கவே இல்லைம்மா...”

“என்னடா உளர்ற....”

“உளர்றேனா... ஒன்பது கிரகமும் உச்சத்துல இருக்கற ஒருத்தனால கூட உன் மருமக பண்ற சாப்பாட்டை சாப்பிட முடியாது.... குடுகுடுப்பைக்காரன் சொல்ற மாதிரியே ரத்தம் கக்கி சாவான்... so பாட்டி நிலைமையை யோசி....”

“Very bad ராம்... போன் வீக் கூட சம்யல் சூப்பர்ன்னு சொல்லிச்சு....”

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.