(Reading time: 14 - 28 minutes)

“அப்போ நீ என்ன சமைச்ச சொல்லு...”

“Pasta, Rösti, Garac and Fondue...”

“இந்தப் பேரையெல்லாம் நீ சொன்னதுக்காகவே என் பாட்டி உன்னைத் தள்ளி வச்சுடும்.... எங்க ஊர் காரக்குழம்புக்கு இணையான சாப்பாடு உலகத்துல எந்த மூலையிலயும் இல்லைன்னு பேசுவாங்க அவங்க....இதுல நீ cheese Fondue-வ அண்டாவோட கொண்டு போய் வச்ச அவ்வளவுதான்....”

“Oh my god.... mom இப்போ இன்னா செய்து....”

“கவலைப்படாதடா... அவங்க வர இன்னும் ஒரு வாரம் இருக்கு.... டெய்லி நீ ஆபீஸ் விட்டு வந்தவுடனே நான் உனக்கு எப்படி அதை செய்யனும் அப்படின்னு சொல்லித்தரேன்.... ராம் நீ என்ன பண்ற.... பலாப்பழம், வெல்லம்  அப்பறம் தேங்காய்ப்பால் இதெல்லாம் இந்தியன் ஸ்டோர் போய் வாங்கி வச்சுடு...”

“வெல்லம், தேங்காய்ப் பால் கூட ஓகே... ஆனா பலாப்பழம் கிடைக்கறது கஷ்டம்மா...”

“Yes mom.... ராம் is right... பேஸ்ம(பேசாம) orange use பண்லாமா(பண்ணலாமா)....”

“அச்சோ கேக்கும்போதே வாந்தி வருதே... அம்மா என்னோட ஒரு மாச சம்பளமே போனாலும் சரி ஆன்லைன்ல ஆர்டர் பண்ணியானும் பலாப்பழத்தை வாங்கி வச்சுடறேன்....”

ராம் தனக்கு பலாப்பழம் மூலமாக வந்த சோதனைக் காலத்தை அங்கிருந்த தமிழ் ஸ்டோர் முதலாளியிடம் கண்ணீர் மல்கக் கூற, அவர் ராமின் மீது பரிதாப்பட்டு ஸ்பெஷலாக பாலாப்பழத்தை இரண்டு நாளில் இறக்குமதி செய்து கொடுத்தார்....

மறுநாளில் இருந்து ஆரம்பித்தது பாயசம் மற்றும் பச்சடிப் படலம்...

ராமின் அம்மா skype-ல் இந்தியாவில் இருந்து சொல்ல சொல்ல க்ளாடியா swiss-ல் செய்தாள்... முதல் நாள் பாயசம் பச்சடியாகவும், பச்சடி பாயசமாகவும் உருமாறி வந்தது...

அடுத்த நாள் என்னவென்றே கண்டுபிடிக்க முடியாதபடி ஒரு அவுட்புட் வர க்ளாடியா அழ ஆரம்பித்து விட்டாள்....  ராமின் அம்மா அவளை சமாதானப்படுத்தி மறுநாள் தான் சமைப்பதைப் பார்த்து அப்படியே பண்ணக் கூற.... இந்த முறை மிகவும் மோசம் இல்லாமல் இரண்டும் அல்வா லெவெலில் வந்தது....

“சூப்பர் க்ளாடியா... பாரு இப்போ வந்துருக்குதே இதை அப்படியே கொஞ்சம் தண்ணியா பண்ணிட்டேனா பாயசம் ரெடி...”, என்று ராமும் அவன் அம்மாவும் கூற க்ளாடியா மகிழ்ச்சியின் எல்லைக்கு சென்றாள்...

ஒரு வாரத்தில் பலாப்பழம் சாப்பிட்டு காசிக்கு போகாமலேயே அதை விடும்  நிலைக்கு ராம் வந்துவிட்டான்... ராமின் சோதனைக்காலம் முடிவுக்கு வந்தது.... தான் சுவிஸ் வந்து விட்டதாகவும் மறுநாள் காலையில் அவர்களை வந்து பார்ப்பதாகவும் பாட்டி கூற... அப்பொழுதிலிருந்தே புடவைக் கட்டி தயாராகிவிட்டாள் க்ளாடியா....

றுநாள் மிக அழகாக விடிந்தது... வீட்டிலிருக்கும் தெய்வங்களுக்கு பூப்போட்டு விளக்கேற்றி குடும்பக் குத்துவிளக்காக க்ளாடியா உலகத்திலுள்ள அனைத்து மதக்கடவுள்களையும் தொழுது சமையலறைக்குள் நுழைந்து சமைக்க ஆரம்பித்தாள்.... தன் மாமியார் கூறியிருந்தபடியே ஒவ்வொன்றாக செய்து முடித்து, கடைசியில் பாயசத்தை செய்ய ஆரம்பித்தாள்.... எப்பொழுதும் போல் அல்வா பதத்தில் வர, ராம் சொன்னது போல் சிறிது தண்ணீர் சேர்ப்போம் என்று சேர்க்க அது ரசம் ஆகியது.... அய்யயோ என்று க்ளாடியா அலறிய அலறரில் ஓடி வந்த ராம் பார்த்தது கிட்சென் தரையில் உட்கார்ந்து அழுதுகொண்டிருந்த க்ளாடியாவைத்தான்...

“என்னாச்சு baby.... கை சுட்டுக்கிட்டியா... நான் வந்து ஹெல்ப் பண்றேன்னு சொன்னேன் இல்லை... கடைக்கு போயிட்டு வர்றதுகுள்ள உன்னை யாரு பண்ண சொன்னது....”

“No Ram....Burn ஆவுதில்லை(ஆகலை)..... பாசம் என்ன ஆனாங்க பாரு(பாயசம் என்ன ஆச்சு பாரு)....”

“இந்த அழுகைலையும் உனக்குத் தமிழ் கேக்குது... பாயசம் எங்க காணும்... இது என்ன க்ளாட்ஸ் கை கழுவிட்டு அழுக்குத் தண்ணிய கீழ கொட்டாம அப்படியே வச்சிருக்க...”, ராம் கேட்க, க்ளாடியாவின் அழுகை இன்னும் உச்சஸ்தாயியை எட்டியது....

“என்ன baby... சொல்லிட்டு அழும்மா... உடம்பு சரியில்லையா...”

“நீ ஏன் அப்டி சொல்ச்சு.... அதுதன் பாசம்....”

“என்னதுதுதுது.... அது பாயசமா....”

“Yes ராம்... நீ சொல்ச்சு னா பன்ச்சு... ஒன்லி 5 கிளாஸ் வாட்டர் விட்டுச்சு....”

 “அஞ்சு க்ளாஸா.... நான் சொன்னது ஒரு அரை கிளாஸ்...”

“நீ கிளியர்ரா சொல்றான் இல்லே...  பாட்டி வந்து சண்டே போடும்... க்ளாடியா போவுது சொல்லும்...”

“ப்ச் நீ பண்ணின பாயசத்தை சாப்பிட்டு அப்பறம் அவங்க பேசுவாங்கன்னு சொல்ற... வாய்ப்பே இல்லை…. எதுக்கும் நான் ஆம்புலன்ஸ் சொல்லி வைக்கிறேன்....”

“ஓ ராம்... please இப்போ இன்னா பண்ணுது....”

“இரு யோசிக்கலாம்.... எங்கம்மா சாம்பார் தண்ணியா போச்சுன்னா கொஞ்சம் அரிசி மாவு சேர்ப்பாங்க... அது வேணா ட்ரை பண்ணலாமா...”

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.