(Reading time: 14 - 28 minutes)

2018 - தமிழ் புத்தாண்டு சிறப்பு சிறுகதை - பாட்டியும்... பாயசமும் - ஜெய்

paatti Payasam

வணக்கம் Friends... தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்.... வழக்கமா என்னோட கதைல கருத்து கந்தசாமியா ஏதாவது மெசேஜ் எழுதிட்டே இருப்பேன்... இந்த முறை அப்படி எல்லாம் இல்லை... காமெடி எழுதலாமேன்னு ட்ரை பண்ணி இருக்கேன்... இதெல்லாம் கதையான்னு திட்டாம படிச்சுட்டு அப்படியே கமெண்ட்டிட்டு போங்க.... நன்றி

லோ ராம்….  போன் எடுக்க இவ்வளவு நேரமா... எங்கடா போன....”

“என்னாச்சும்மா எதுக்கு இத்தனை டென்ஷனா பேசற....”

“டென்ஷனா பேசறனா.... சொல்ல மாட்ட நீ... நேத்திக்கு விஷயம் தெரிஞ்சதுல இருந்து எனக்கு BP டப்புன்னு 120லேர்ந்து 200க்கு எகிறிடுச்சு....”

“என்னம்மா சொல்ற.. நீ சொல்றத கேட்டு எனக்குதான் BP ஏறுது இப்போ.... மொதல்ல பதட்டப்படாம விஷயத்தை சொல்லு... என்னாச்சு.....”

“நேத்து உங்க பாட்டி போன் பண்ணி இருந்தாங்கடா....”

“ச்சே இதுக்குதான் இத்தனை பில்ட்அப் கொடுத்தியா... என்ன வழக்கம் போல உனக்கும், உன் மாமியாருக்கும் வாய்க்கா வரப்பு சண்டை நடந்துதா... அதுதான் நம்ம வீட்டுல ஒரு அப்பாவி இருக்காரே... உங்க ரெண்டு பேர் சண்டை முடிஞ்சதும் நீ கொடுக்கற கும்மாங்குத்தையும், பாட்டி கொடுக்கற கராத்தே வெட்டையும் சத்தமில்லாம வாங்க.... அப்படி கொடுத்த அப்புறமுமா உனக்கு bp எகிறிச்சு....”

“என்ன அப்படியே காமெடில தெறிக்க விடறதா நினைப்பா... அவங்க பேசின விஷயம் உனக்கு தெரிஞ்சிச்சு அப்பறமும்  இப்படியே கண்டின்யூ பண்ணுறயான்னு பார்க்குறேன்.....”

“சொல்லு சொல்லு அப்படி என்ன டெர்ரர் நியூஸ்ன்னு நானும் கேக்கறேன்.... அஞ்சு நிமிஷமா விஷயத்தையே சொல்லாம ஜிலேபி சுத்தி இருக்க.... மேட்டர் மட்டும் சப்பையா இருக்கட்டும்.... அப்பறம் இருக்கு... அப்பாக்கிட்ட சொல்லி இந்த மாசம் அகர்வால் ஸ்வீட் கட் பண்ண சொல்லிடறேன்....”

“போடா போடா....அதெல்லாம் என் புருஷன் நீ சொல்றதை கேக்க மாட்டாரு....”

“சரிம்மா சரி உன் புருஷன் உனக்கு சின்ன கூஜா இல்லை பெரிய குடத்தையே தூக்குறவர்தான்.... நீ மொதல்ல விஷயத்துக்கு வா....”

“டேய் பாட்டி உங்களைப் பாக்க அடுத்த வாரம் Swiss வர்றாங்கடா....”

டப் என்ற சத்தம் ராமின் காதிற்கு மட்டும் கேட்டது.... வேறு ஒன்றும் இல்லை... அதிர்ச்சி தாங்காமல் அவன் இதயம் கொடுத்த சவுண்ட் அது....

“ராம்... ராம்... டேய் லைன்ல இருக்கியா?”

“அ.... அ.... அ...”

“அ-க்கு அப்பறம் ஆ-டா எதுக்கு தேஞ்சுபோன ரெகார்ட் மாதிரி அ-வையே சொல்ற....”

“அம்மா நிஜமாவாம்மா சொல்ற.... பொய்தானே.... ஏப்ரல் முதல் தேதி முடிஞ்சு ஒரு வாரம் ஆகுது.... முழிச்சுக்கோ...”

“பொய்யல்ல.... நிஜம்....”

“ப்ரோக்ராம் டைட்டில் மாதிரியே சொல்லாதம்மா.... பாட்டி இங்க வரணும்ன்னா எத்தனை ப்ரோஸீஜர் இருக்கு தெரியுமா... விசா வாங்கவே ஆயிரெத்தெட்டு டாகுமென்ட்ஸ் கொடுக்கணும்... அதுவும் இல்லாம நானும் invitation லெட்டர் கொடுக்கணும்... அப்படி எல்லாம் எதுவுமே நான் பண்ணலை... அப்பறம் எப்படி அவங்களுக்கு விசா கிடைக்கும்....”

“டேய் அவங்களுக்கு விஸா கிடைச்சதை நினைச்சா எனக்கு இன்னும் வயிறு எரியுதுடா....”

“போன மாசம் அவங்க நம்ம வீட்டுக்கு வந்து இருந்தாங்க இல்லை... அப்போ டிவில ஒரு போட்டி நடத்தினாங்களே.... நான் கூட நம்ம வீட்டுல இருக்கறவங்க எல்லார் பேருலயும் பதில் போட்டேன்னு சொன்னேன் இல்லை.... காலக்கொடுமை அந்தப் போட்டில பாட்டி பேருக்கு அனுப்பின என்ட்ரிக்கு முதல் பரிசு விழுந்திருக்குதுடா... முதல் பரிசு என்ன தெரியுமா மூணு நாள் swiss ட்ரிப்”

“என்னது... நல்லா பார்த்தீங்களாம்மா.... அது பாட்டிக்குத்தான் விழுந்திருக்கா...”

“ஆமாம்டா... நான் வேற ஒரே நம்பர்ல இருந்து அனுப்ப வேணாமேன்னு உங்கப்பா என்ட்ரியும், பாட்டிதும் அவங்க போன்ல இருந்து அனுப்பினேன்... கடைசில சரியான பதில் தெரிஞ்சு அனுப்பின எனக்கு 5 ரூபாய் ஆறுதல் பரிசு கூட விழலை...”

“அம்மா நானே பாட்டி வந்தா எப்படி சமாளிக்கறதுன்னு பயத்துல இருக்கேன்... நீங்க பரிசு விழலைன்னு கவலைப்படறீங்க...”

“ப்ச் பாவம்தாண்டா நீ....எப்படித்தான் சமாளிக்கப் போறியோ....”

“ஆமா க்ளாடியாவை என்னம்மா பண்றது... அவங்க அம்மா வீட்டுக்கு போக சொல்லிடவா....”

“இன்னும் எத்தனை நாளைக்குத்தாண்டா அவங்களுக்கு பயந்துட்டு மருமகளை எல்லாத்துக்கும் ஒதுக்கி வைக்கிறது... அதெல்லாம் ஒண்ணும் வேண்டாம்... இங்க நடக்கற ஒரு பூஜைக்கும் அவளை கூப்பிட விட மாட்டேங்கறாங்க... அங்கயும் வந்து அவளை ஒதுக்குவாங்களா...”

“நீ சொல்றதும் சரிதான்ம்மா... ஆனா அவங்க அதைத் தொட்டா குத்தம் இதைத் தொட்டா குத்தம்ன்னு ஆயிரெத்தெட்டு ரூல்ஸ் சொல்லுவாங்களே.... அதையெல்லாம் எப்படி சமாளிக்கறது....”

“கவலைப்படாதேடா... நீ வீட்டுக்குப் போயிட்டு க்ளாடியா ஆபீஸ்ல இருந்து வந்த உடனே எனக்கு கூப்பிடு....  அவக்கிட்ட நான் பாட்டி வந்தா எப்படி நடக்கணும்ன்னு சொல்றேன்...”, என்று கூறி கைப்பேசியை வைக்க நான்கு டிகிரி குளிரிலும் ராமிற்கு வேர்த்து வடிந்தது....

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.