(Reading time: 13 - 25 minutes)

அவளது நடுக்கம் கண்டு மனதிற்குள் சிரித்த அந்த காமுகன் தனது மொபைலை எடுத்து அவ்வளவு நேரம் தான் செய்து கொண்டிருந்த லீலையை வீடியோவாக ரெகார்ட் செய்திருந்ததை அவளிடம் எடுத்துக் காட்டினான்..

இருவரின் முகம் தெரியாவிட்டாலும் அவனின் செய்கைகள் க்ளியராக ரெகார்ட் ஆயிருந்தது..

“ப்ளீ..ஸ் சா..ர்..அதை டெலிட் பண்ணிருங்க..”,என்றாள் பிரதி அழுகையுடன்..

“அது நீ நடந்துக்கறது பொருத்து..”,என்று மீண்டும் இளித்தவன்,”நான் பண்றதைப் பத்தி வெளியில் சொன்ன இந்த வீடியோவை எல்லாருக்கும் காட்டிருவேன்..”,என்றவன் தன் கையழுதத்தை மேலும் கூட்டினான்..

வலி தாங்காமல் அவள் கண்ணில் நீர் பெருக அதைக் கண்டு இரசித்துக் கொண்டிருந்தவன் அந்த பீரியட் முடிந்ததற்கான பெல் அடிக்கவும் அவளை விரசமாக பார்த்தபடி எழுந்து போனான்..

பெல் அடிக்கும் வரை வழக்கம் போல் உறங்கிக் கொண்டிருந்த முகிலா பெல் அடித்ததும் பிரதன்யாவின் பக்கம் திரும்பியவள் அவள் கண்ணீரைக் கண்டு,”ஏண்டி அழற..?? என்னாச்சு..??”,என்றாள்..

பிரகாஷின் செயலில் ஏற்கனவே நடுங்கிக் கொண்டிருந்தவள் இதை வெளியே சொல்ல நடுக்கம் கொண்டு ஒன்னும் இல்லை டி என்பது போல் தலையசைத்தவள்..

முகிலா மேலும் தோண்டி துருவுவதற்குள் அடுத்த பீரியட்டுக்கான ஆசிரியர் வர அந்தப் பேச்சு அங்கேயே முடிந்தது..

இதுவே ஒவ்வொரு நாளும் தொடர்ந்தது..

ஒவ்வொரு முறை அவனை அவள் தடுக்க முயன்று தோற்றுத் தான் போனாள் போனாள் பிரதி..

நடந்ததை வெளியே சொல்ல பயம்.. தன் மேல் தான் தவறு என்று நினைத்துக் கொள்வார்களோ என்று ஒரு புறம் இருந்தால் மறுபுறம் இது வெளியே தெரிந்தால் தன்னை அனைவரும் கேலி செய்வார்களே என்ற நடுக்கும்..

அன்னையிடம் சொல்லலாம் தான்.. ஆனால் அதை அவர் எப்படி எடுத்துக் கொள்வார் எனத் தெரியவில்லை..

இவன் இங்கு தொட்டான் என்பதை வெளியே சொல்ல அவளுக்கு தைரியம் இல்லாமல் போயிருந்தது பிரகாஷின் செயல்பாட்டால்..

தவறு பிரகாஷின் பக்கம் இருந்தாலும் அவளுக்கு ஏனோ தவறு தான் செய்வது போல் ஒரு உணர்வு..

கொஞ்சம் கொஞ்சமாக தன்னை ஓட்டுக்குள் சுருங்கச் துவங்கினாள்.. பேச்சுக்கள் குறைந்து அனைவரிடமும் விலக துவங்கினாள்..

பிரதன்யா தற்கொலை செய்ய முடிவெடுப்பதற்கு முதல் நாள்..

ழக்கம் போல் கடைசி பெஞ்சில் அமர்ந்திருந்தவளை சீண்டிக் கொண்டிருந்தான் பிரகாஷ்..

பிரகாஷிடம் சந்தேகம் கேட்க எதர்ச்சையாக இரண்டு பென்ச் முன்னே அமர்ந்திருந்த கதிர் திரும்ப பிரதன்யாவின் கண்ணீர் கண்ணில் பட்டது..

இவள் எதற்கு அழுது கொண்டிருக்கிறாள் என்று உற்று நோக்கியவன் பிரகாஷின் கைகள் இருக்கும் இடத்தைக் கண்டு விழி பிதுக்கினான்..

அந்த வயதுக்கே உரிய பழக்கம் அவன் கண்டதை தன் நண்பர்களிடம் சொல்ல தூண்டியது..

அடுத்த நாளே இவ்விஷயம் அந்த கிளாஸ் மாணவர்களுக்கு தெரிந்து விட்டது..

கதிர் கூறிய விஷயம் சரியா என செக் செய்ய அனைவரும் காத்திருந்தனர்..

திய இடைவேளைக்கு பிறகு அன்று பிரகாஷின் கிளாஸ்.. உதறல் எடுக்கத் துவங்கியது பிரதன்யாவிற்கு..

என்ன முயன்றும் அன்று அவளால் உதறலை கட்டுப் படுத்த இயலவில்லை..

அனைத்து மாணவர்களின் பார்வை அவள் மீதிருந்ததால் அவளது ஒவ்வொரு அசைவையும் படித்துக் கொண்டிருந்தனர்..

மாணவர்களின் இச்செயலை கண்டு கதிருக்கு மனதில் குற்ற உணர்வு..

யார் என்ன சொன்னாலும் பரவாயில்லை என்று நினைத்தவன் நேராக முகிலாவுடன் இருக்கும் அவளிடம் சென்று மன்னிப்பு வேண்டி நேற்று நடந்ததைத் தான் பார்த்ததாகவும் அதை தன் ப்ரெண்ட்ஸிடம் கூறியதை சொல்லி சாரி என்றான்..

அவ்வளவுதான், கண்ணீரை அடக்க முடியாமல் நேராக ரெஸ்ட் ரூமிற்கு ஓடினாள்..

கதிரை முறைத்த வண்ணம் பிரதன்யாவின் பின்னே சென்ற முகிலாவிற்கு அவளின் தேம்பலும் கதறலும் கண்டு பயம் பிடித்துக் கொண்டது..

“பிரதி..”

“..........”

“பிரதி.. கதிர் என்னடி சொல்றான்.. எனக்கு ஒன்னும் புரியல..”

“...........”,அழுகை மட்டுமே பதிலாய்..

“அழாதே டி.. என்னன்னு சொல்லு..”

“...............”,மேலும் அழுகை கூடியது..

“நான் நம்ம ரேணு மிஸ்ஸை கூட்டிட்டு வரேன்..

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.