(Reading time: 13 - 25 minutes)

“ப்ளீ..ஸ்.. முகிலா வேண்..டாம்..”,என்றவள் பிரகாஷ் செய்தது அனைத்தும் கூனி குறுகியபடி அழுது கொண்டே கூறினாள்..

அவனின் செயல்களை அறிந்த முகிலாவிற்கு இப்பொழுது பயம் பிடித்துக் கொண்டது குற்றவுணர்வும்.. தான் இவளை எப்படி கவனிக்காமல் விட்டோம் எனவும்.. தன் அருகில் நடப்பது ஒன்றும் தெரியாத அளவிற்கு கிளாசில் தூங்கும் தன் பழக்கத்தின் மீது வெறுப்பும்..

“அழாதே பிரதி.. எதுவா இருந்தாலும் வீட்ல சொல்லிரு டி..”

“எனக்கு பயமா இருக்கு டி..அம்மா அடிப்பாங்களோன்னு..”,பரிதாபமாக..

“நீ தான் ஒன்னும் பண்ணலையே.. அப்புறம் ஏண்டி..”

“இல்லை டி.. எனக்கு பயமா இருக்கு..”,சொன்னதையே திரும்பவும் சொல்லிக் கொண்டிருந்தாள் பிரதன்யா..

முகிலாவிற்கும் இதை எப்படி சரி செய்ய வேண்டும் என்று தெரியவில்லை.. எப்படி அவளை சமாதான படுத்தவேண்டும் என்றும் தெரியவில்லை..

அதற்குள் பெல் அடித்ததால் இருவரும் கிளாசிற்கு சென்றனர்..

தன்னையே அனைவரும் பார்ப்பது போல் உணர்வு பிரதன்யாவிற்கு.. மண்ணில் அப்பொழுதே புதைந்து விடலாமா என்று கூட தோன்றியது..

பூதம் (பிரகாஷ்) வழக்கம் போல் அன்றும் பிரதன்யாவின் அருகில் அமர்ந்தது..

அவன் கைவைப்பதை ஓரக் கண்ணால் கண்ட முகிலா சத்தமாக சார் என்று அழைத்தாள்..

அவள் கண்டுகொண்டாலோ என்பது போல் கைகளை விலக்கியவன் அவள் ஏதோ சந்தேகம் கேட்கவும் நிம்மதி பெருமூச்சு விட்டவன் அவள் சந்தேகத்தை தீர்த்துவிட்டு மீண்டும் பிரதன்யாவின் பக்கம் அமர சென்றான்..

அதை தடுக்கும் விதம் கதிர் சந்தேகம் கேட்க என அன்று அவன் பீரியட் முடிந்தது..

பிரதன்யாவோ இந்த விஷயம் தன்னுடன் படிக்கும் மாணவர்களுக்கு தெரியவும் முடிவெடுத்துவிட்டாள் தனது முடிவை..

இன்று...

“....ன்னைக்கு வீட்டுக்கு வந்ததுக்கு அப்புறம் அம்மாட்ட தூக்கம் வருதுன்னு சொல்லிட்டு அம்மா ரூமை விட்டு போற வரைக்கும் பெட்ல படுத்திருந்தேன்..அப்புறம்..”,என்று நிறுத்தி குற்றவுணர்வுடன் ரேவதியைப் பார்த்தாள் பிரதி..

“அப்புறம்..”,அவளை ஊக்குவித்தது ரேவதியின் குரல்..

“அம்மா போனதுக்கு அப்புறம்.. அம்மாக்கு தெரியாம ஸ்டோர் ரூம் போய் அவங்க வாங்கி வெச்சிருக்க எலிமருந்து எடுத்துட்டு வந்து சாப்டேன்..”,என்று பரிதாபமாக கூறியவள் மீண்டும் தேம்பத் துவங்கினாள்..

“ஒன்னும் இல்லடா அழாதீங்க..”,என்று பிரதியைத் தேற்றியவர், ஒரு மணி நேரம் தூங்குவதற்கு தேவையான சின்ன டோஸ் ஒன்றை கொடுத்து உறங்க வைத்துவிட்டு சிவாவிடமும் பவானியிடமும் வந்தார் ரேவதி..

இருவரின் பேய் அறைந்த முகம் கண்டு மனது கஷ்டப்பட்டாலும்,”வெல்.. உங்க பொண்ணு பேசுனது கேடிருப்பீங்கன்னு நினைக்கறேன்.. அவளை அவங்க டீச்சர் ஹராஸ் பண்ணிருக்கார்..யாருக்கிட்டயும் சொல்ல தைரியம் இல்லாம.. தன் கிளாஸ் பசங்களுக்கு தெரிஞ்சு போச்சு..இனி தன்னை கேலி செய்வார்கள் என்ற பயத்தில் தப்பான முடிவு எடுத்திருக்கா உங்க பொண்ணு..”

“...............................”,வார்த்தைகள் ஏதும் வெளிவராமல் சிலையாய் அமர்ந்திருந்தனர் இருவரும்..

“இப்போதைக்கு அவங்களுக்கு நல்லா ரெஸ்ட் தேவை.. அவங்க இந்த சம்பவத்தை டைஜெஸ்ட் பண்ண டைம் எடுக்கும்..அதுவரைக்கும் நீங்க இதைப் பற்றி அவளிடம் கேட்க வேண்டாம். தெரிஞ்ச மாதிரி கூட காட்டிக்க வேண்டாம்.. எப்பவும் போல நார்மலா இருங்க..”

“சரிங்க டாக்டர்..”

“ஒரு வாரம் கழிச்சு என்னை வந்து பாருங்க..”,என்று அவர்களுக்கு விடை கொடுத்தார்..

ஒரு மாதத்திற்கு பிறகு..

பெண் பிள்ளைகள் மட்டும் படிக்கும் கான்வண்ட் அது..

“அம்மா.. மதியம் எனக்கு பொட்டேடோ ரோஸ்ட் வேண்டும்..”,என்று கத்திவிட்டு பள்ளிக்குள் ஓடினாள் பிரதி..

{kunena_discuss:785}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.