(Reading time: 12 - 24 minutes)

சிறுகதை - மரம் – குருராஜன்

tree

கரத்தின் மத்தியில் ஒரு பெரிய வீடு. அதன் வாசலில் ராமசாமி இல்லம் என்று பேர் பலகை இருந்தது.

அதன் வாசலில், பெரிய மாமரம் ஒன்று வெட்டப் பட்டு கீழே கிடந்தது.

அதைப் பார்த்து அழுது கொண்டிருந்தான் 5 வயதான விஜய். அந்த மரத்திற்கும், அவனுக்கும் ஒரே வயதுதான் ஆகிறது. விஜய் பிறந்த தினத்தன்று, அவன் பிறந்த தினத்தைக் கொண்டாடும் விதமாக அவன் தாத்தா அந்த மரத்தை நட்டார்.

“டேய், இப்போ எதுக்கு அழுதுட்டு இருக்க. இது வெறும் மரம் தாண்டா. சும்மா அழரத நிறுத்து” என்று தன் மகனை அதட்டிக் கொண்டிருந்தான் ராஜேஷ்.

“இது தாத்தா, எனக்கு பர்த்டேக்கு பரிசா கொடுத்த மரம். எனக்கு ரெம்ப புடிச்ச மரம் பா” என்று அழுது கொண்டே பதில் சொன்னான் விஜய்.

“சரி டா விடு, புது கார் நிறுத்த ஷெட் கட்டனும். அதுக்காக தான் இந்த மரத்தை வெட்டினோம்” என்று தன் மகனுக்கு விளக்க முயன்றான் ராஜேஷ்.

“போங்க பா, இந்த மரம் ஃபுருட்ஸ் நா எனக்கு ரொம்ப பிடிக்கும். எனக்கு மட்டும் இல்ல, என்னோட ப்ரெண்ட்ஸ்க்கும் தான். ஐ லவ் மேங்கோஸ்” என்று அழுது கொண்டே கூறினான் விஜய்.

“டேய் ஒரு மாம்பழத்துக்கா இப்படி அழற, காசு கொடுத்தா நிறைய மாம்பழம் கிடைக்கும்.  நான் உனக்கு வாங்கிதறேன். உனக்கு மட்டும் இல்ல உன்னுடைய ப்ரெண்ட்ஸ்க்கும் சேர்த்து வாங்கி தறேன் போதுமா. இப்போ அழுறத நிறுத்து” என்று சமாதானம் கூறினான் ராஜேஷ்.

ஆனாலும் விஜய் கேட்பதாக இல்லை. அழுது கொண்டே இருந்தான்.

இவ்வாறாக நடந்து கொண்டிருக்க, “அண்ணா” என்று ஒரு குரல் கேட்க, அந்தத் திசை நோக்கித் திரும்பினான் ராஜேஷ்.

ஒரு சிறு குழந்தை பச்சை நிற பாவாடை சட்டையில் நின்று கொண்டிருந்தாள்.

“என்ன மா, யார் நீ. என்ன வேண்டும்” அக்கறையோடு விசாரித்தான் ராஜேஷ்.

விசாரிக்கும் போது சுற்றி முற்றிப் பார்த்தான். அந்தக் குழந்தையுடன் யாரும் இல்லை. எப்படியும் தன் மகன் வயதுதான் இருக்கும் அந்தப் பெண் குழந்தைக்கு. இப்படி தனியாக இந்தக் குழந்தையை விட்டு விட்டு எங்கே இவளின் பெற்றோர்கள் சென்றார்கள் என்ற கேள்வி அவன் மனதுக்குள் ஓடியது.

சிறிது நேரம் இவனையே பார்த்த அந்தக் குழந்தை, “அண்ணா என் கூட கொஞ்சம் வறிங்கள” என்றாள்.

ராஜேஷ்ற்க்கு ஒன்றும் புரியவில்லை. யார் இந்தக் குழந்தை, எங்கே அழைக்கிறாள், எல்லாம் குழப்பமாகவே இருந்தது.

“யாருமா நீ, எங்கே குப்பிடுற” என்று தன் சந்தேகத்தை அந்தக் குழந்தையிடமே கேட்டான்.

“என் கூட வாங்க ணா, எல்லாம் நான் தெளிவா சொல்றேன்” என்று  கூறி விட்டு அந்தக் குழந்தை நடக்க ஆரம்பித்து.

ஏதோ மந்திரத்திற்கு கட்டுப் பட்டவன் போல,  அந்தக் குழந்தை பின்னால் நடக்க ஆரம்பித்தான் ராஜேஷ்.

அவன் நடக்கும் போது அவன் கண் முன்னால் பல மாற்றங்கள். சின்ன கட்டிடங்கள் இடிக்கப் பட்டு, பெரிய பெரிய கட்டிடங்கள் உருவாயின. ஓடும் வாகனங்கள் எல்லாம் பறக்கும் வாகனங்களாக உருமாறின. பறக்கும் வாகனங்கள், மின்னல் வேக நகர ரயில்கள் என எல்லாம் அவன் கண் முன்னாள் தெரிந்தன. அது அவனுக்குப் புதிதாகவும் வியப்பாகவும் இருந்தது.

பெரிய பெரிய மரங்கள் எல்லாம் அவன் கண் முன்னாலே வெட்டப் பட்டு, அந்த இடத்தில் எல்லாம் பெரிய வீடுகள், காம்ளக்ஸ், மால்ஸ் என அந்த இடமே மாறிப் போயின.

நடந்தவனும் வயதானவனாக மாறிப் போய் மீண்டும் தன் இல்லத்தின் முன்னாலேயே வந்து நின்றான். தனக்கு என்ன ஆயிற்று, எப்படி ஒரு நெடிக்குள் இப்படி வயதானவனாக மாறிப் போனோம் என்று எதுவும் அவனுக்குப் புரியவில்லை. சற்று நேரத்திற்கு முன்னால் வெட்டிப் போட பட்டிருந்த மரத்தையும் காண வில்லை அதைப் பார்த்து அழுது கொண்டிருந்த தன் மகனையும் அந்த இடத்தில் காணவில்லை.

சுற்றி முற்றிப் பார்த்தான், அவன் வீட்டைச் சுற்றிலும் இருந்த காலி இடங்களில் பெரிய பெரிய கட்டிடங்கள், மரங்கள் இருந்த இடமும் கட்டிடங்களாக காட்சி அளித்தது. மனிதர்கள் எல்லாம் விண்வெளி வீரர்கள் போல் ஒரு உடை அணிந்து கொண்டு அங்கும் இங்கும் நடந்து கொண்டு இருந்தனர்.

அவன் நின்ற அந்த இடமே அனலாய் கொதித்தது. ஏதோ தீ சட்டிக்குள் நிற்பது போல் உணர்ந்தான் அவன். கடும் வெயில், அனல் காற்று என எல்லாம் சேர்ந்து அவனைக் கலைத்து போகச் செய்தது.

அவன் நாக்கு வறண்டு போயின. அவனால் சரியாக சுவாசிக்கக் கூட முடியவில்லை. அவன் உடலில் இருந்து வெளியேறிய வேர்வை அடுத்த கனமே காற்றில் ஆவியாய் மறைந்தது.

ஒரு நிமிடத்திற்குள்ளாகவே அவன் உடலில் ஆங்காங்கே சூட்டு கொப்பளங்கள் தோன்றின. அவனுக்குத் தலை சுற்றி மயக்கம் வருவது போல் ஆனது.   

அவன் மயங்கி விழப் போகும் வேலையில், அப்பா என்று ஓடி வந்து தாங்கி பிடித்தான் ஒரு இளைஞன். ராஜேஷ்யை அப்படியே கை தாங்கலாய் வீட்டினுள் அழைத்துச் சென்றான்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.