(Reading time: 13 - 25 minutes)

கைக்குள் புதிதாக  வந்து  சேர்ந்திருந்த  தொழில்நுட்ப  வஸ்துவை அவள் சிறு குழந்தையின்  மனநிலையுடன் தானே அணுகி இருப்பாள் என புரிந்து கொள்ள தவறி விட்டேன். கத்தார்ல  வாட்சப்  வீடியோ  கால்  பேச  முடியாதாம். IMO னு  ஒண்ணு இருக்கு . அதை போட்டுக்க   சொல்லி  இருக்காரு. போடணும்  .. என ஆச்சர்யத்துடன் அவள் சொன்னது வேறு  நினைவிற்கு வந்து அவஸ்தை படுத்துகிறது .

தொழில் நுட்பத்தின்  மாய  தோற்றத்தின் தொடக்கநிலை நம்மை எந்த அளவிற்கு  மயக்கும்  என்பதை  சில  நிமிடங்கள் யோசித்திருந்தால், அவள் செய்ததில் எந்த  தப்புமே  இல்லை  என்பதை உணர முடியும். என்ன செய்ய? காலத்தையும், பொறுமையையும், நிதானத்தையும், சில  உணர்ச்சிகளையும்   இழுத்து  பிடித்து கட்டிப்போடும்  வக்கற்றவள்  தானே நம்மில் பலரும்?

ர்ர் ..ர்ர் ..ர்ர் ..ர்ர்  என  உறுமிய  போனை  எடுத்தேன்.  கசின்கள்  படைத்த  குரூப்பில்  கண்ணா பின்னா என மெசேஜ்கள்  என்னை  மீண்டும் மிருகமாக்க முனைந்தன. போனை  தள்ளி  வைத்தேன் . பசிக்க தொடங்கியது.. மணி 9.30.

மறுபடியும்  ர்ர் ..ர்ர் ..ர்ர் ..ர்ர்! அசுவாரஸ்யமாக  போனை  எடுத்தேன். . பல மெசேஜ்  குவியல்களுக்கு  மத்தியில்  வாஸந்தி  என்னை சேர்ந்திருந்த  4  குரூப்களிலிருந் தும்  நீக்கப்பட்டிருந்தேன்!

மீண்டும்   மனதிற்குள்  பீதி. .  போச்சு .. என்னை  ப்ளாக்கும் பண்ணிடுவா  என்ற  பயம்  சற்றே பதட்டமடைய  செய்த  நொடியில் , வாஸந்தியிடமிருந்து  போன் .

ஏட்டி.. திரும்ப கூப்பிட்டிருந்தியா ? மாமாவை குளிப்பாட்ட போய்ட்டேன்.. இப்போதான்  எல்லாம்  முடிச்சுட்டு பார்த்தேன் .

சாரிடி . நான் பாட்டு  கோட்டி  மாதிரி  எல்லா குரூப்லயும்  உன்னை சேர்த்துட்டேன்ல ?

 இனிமே  செய்யல சரியா?  அதெல்லாம்  விடு . ஏதாவது சாப்டியா ? என்னத்த சாப்பிட்டா?  என அவள்  கேட்ட நொடியில்  என்  மனநிலை எப்படி இருந்தது என்பதைத்தான்  கதையின்  முதல்  வரியில் படித்தீர்கள். ….

{kunena_discuss:785}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.