(Reading time: 10 - 19 minutes)

சிறுகதை - கல்யாண வைபவம்.... - மகி

love

மாலை ஆறு மணி....... அனைவரும் தன்னுடைய வேளையை முடித்துவிட்டு அலுவலகத்தில் இருந்து கிளம்பினார்கள்... ஆனால் அங்கே அந்த ஒரு ஜோடி கண்களும்... கைகளும்... தன்னுடைய வேளையை நிறுத்துவதாகயில்லை...... அனைவருமே கிளம்பிவிட்டனர் அவளை தவிர.......

என்ன கல்யாணபொண்ணு....... நீ இன்னும் கிளம்பாமல் என்ன செய்யர... என உரிமையாக அழைத்தால் அவளுடன் பணிபுரியும் கவிதா....

போகனும்... கவிதா... கொஞ்சுன்டு வேளையிருக்கு..முடிச்சதும் போகனும்.. நீ போகனுமா நேரம் ஆச்சா.. இல்லைன்னா இரு போகலாம்....

என்ன இன்னும் வேளையிருக்கா.... நீ வீட்டுக்கு போறதாயில்லையா....?

உனக்கு வேளையிருந்த நீ கிளம்பு கவி..

ஏய்.... நான் அப்படி சொல்லல.. உனக்கு இன்னுமா வேளையிருக்கு.... நீ இன்னுமா இந்த ஓவர் டைம் பன்னர...

கவி சும்மாயிரு இப்படி உட்காரு.... கொஞ்சம் தான் முடிஞ்சது போலாம்....

ஏய் நீ கல்யாணபொண்ணு.. உன் முகத்த பாரு எப்படியிருக்குன்னு.. மாப்பிள்ளை சார் போன் பன்னராரா.. இல்லையா..!!!

ம்... தயா எல்லாம் போன் பன்ராரு.. ஆனா பேசரது தான் இல்ல..

என்ன தாரிகா... சொல்லர நீ பேசரது இல்லையா...?? தாரா.. உன்மையா சொல்லு உனக்கு இந்த கல்யாணத்துல முழுசம்மதம் தானே.....??!

கவி என்ன நீ... அது எல்லாம் முழுசம்மதம் தான்.. இல்லைனா இவ்ளோ துரம் வருமா...

நான் அதுக்கு சொல்ல வர்லடி.. ஐய்யோ.. கடவுளே..!! அவ அவ கல்யாணம் பிக்ஸ் ஆனா.. போன்ன கிளையே வைக்கமாட்டா.. நீ என்னடான்னா... முடியல்ல..... கல்யாண மாப்பிள்ளை ரொம்ப பாவம்டி......

சும்மாயிருடி...... தயா என்ன புரிஞ்சுக்குவார்.....

பாருடா.......... இந்த கேப்புளையும்.... எல்லாம் எந்த குறையும் இல்லாம போகுதா..... நடக்கட்டும்.. நடக்கட்டும்....

கிண்டல் பன்னாதடி.....

ஓ..... வெட்கமா...... தாங்க முடியல்ல... போதும்.. சகிக்கல...........

போடி...... சரி சரி போகலாம் வேளை முடிஞ்சது......

அப்பாட முடிஞ்சது.... போலாம்...போலாம்......

இருவரும் பேசிகிட்டே பஸ்டாண்டு வந்தனர்...

ஓ...... போன் பன்ன மறந்துட்ட ........

என்ன தாரா நைட்ல ரொமான்ஸ் ஆ..... நடத்து.....

ஏய்...... சும்மாயிரு அம்மாக்கு தான் போன்பன்னர..... போன்னே எடுக்கல......

நீ அப்பரமா போன் பன்னிக்கோ இப்போ வா.. பஸ் வந்திருச்சு....  ஏய் இரு.... ஐச்சோ...

என்ன ஆச்சு தாரா... அம்மா போன் எடுக்கலையா.. ம்..... சரிவிடு... வீட்டுக்கு தானே போர.. அப்பரம் என்ன...

தாரா... நான் ஒன்னுகேக்கட்டா...... ம்...... உனக்குன்னு ஆசையே இல்லையா...??

என்ன கவி எனக்கு புரில்ல....!!

இல்ல.. எப்போ பார்த்தாலும் அப்பா,அம்மா,தம்பி தானா... உனக்குன்னு ஆசை ஏதாவது இருக்கான்னு கேக்கலாம்ன்னு தான்....

என்ன பன்ரது கஷ்டப்படர குடும்பம்மா போச்சு.. வீட்டுக்கு முத்த பொண்ணு வேற.. எல்லாரையும் பாத்துக்கர பொறுப்பு என்னோது அதனால தான்....

அம்மா தாயே உன்கிட்ட தெரியாம கேட்டுட்டேன்... போதும்...விட்டுரு தாயே... போடி...

அப்போ உனக்குன்னு ஆசையே இல்லையா.....!! கல்யாணத்தை பத்தி கூட ஆசை இல்லையா....?!!

இல்லாம இருக்குமா.....    அப்போ....... இருக்கா... சொல்லேன்......சொல்லு......

ம்.......... சொல்லரேன்டி......

வெளிச்சமே தெரியாத இருட்டு......

அமைதியா கேக்கர அலை சத்தம்......

தன்னவனோட கை கோர்த்துகிட்டு.......

சந்தோசத்துல மிதக்கரமாதிரியே..... படகுல கொஞ்ச தூரம் போகனும்.....

அந்த இருட்டுக்கு அங்க அங்க நட்சதிரம்.....

வானத்துல பிறை நிலா....

தாரா....... அது என்ன அங்க அங்க  நட்சதிரம்...? அப்பரம் பிறை நிலா..? ஏன்டி முறைக்கர....!

நான் எவ்ளோ அனுபவிச்சு சொல்லிகிட்டு இருக்கேன்... போ கவி....

ஐச்சோ... சாரி.... சாரி டி... என்ன பன்னரதுடி.... பழகிருச்சு.. இனி டிஸ்டப்பன்னமாட்ட நீ சொல்லு....

ம்... தெளிவாவே சொல்லர.. கடலுக்கு நடுவுல்ல எங்க படகு.. பக்கத்துல்ல எங்கல சுத்தி விளக்கு.. வானத்துல பிறை நிலா.. நானும் அவனும் மட்டும்.. எனக்கு பிறை நிலா ரொம்ப பிடிக்கும்.. அங்க எனக்கு அழகான ஓரு ரோஸ் குடுத்து.. ப்ரோப்போஷ் பன்ன்னும்..

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.