Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *
Menu

Chillzee KiMo - கதை பிரியர்களுக்கான Chillzeeயின் புதிய சேவை!

1 1 1 1 1 Rating 5.00 (1 Vote)
சிறுகதை - நல்லது நினைக்க... - ரவை - 5.0 out of 5 based on 1 vote
Pin It

சிறுகதை - நல்லது நினைக்க... - ரவை

marriage

ரே இரண்டு கட்சியாகப் பிரிந்து நின்றது. "சாரதி அப்படிச் செய்யக்கூடியவன் அல்ல; ஒழுக்கமானவன்." என ஒரு பிரிவும், "எந்த ஆணையும் நம்புவதற்கில்லை, வேலை தருவதாக ஆசைகாட்டி அதையே தனக்கு சாதகமாக்கிக்கொள்ளலாமில்லையா? எந்த ஒரு பெண்ணும் இந்த விஷயத்தில் பொய் சொல்லமாட்டாள்......"என மற்றொரு பிரிவும் வாதிட்டனர்.

எங்கு பார்த்தாலும், உலகமுழுவதும், இப்போது இதுதானே பெண்களின் குமுறல்! வேலைக்கு செல்லும் பெண்களை, அதிகாரத்திலுள்ள ஆண்கள் அசிங்கப்படுத்துகிறார்கள் என்பதுதானே அமெரிக்கா, லண்டன், டில்லி, சினிமாத்துறை, கல்வித்துறை, நீதித்துறை, அரசுத்துறை, எங்கணும் பேச்சு!

நீதி கேட்டு குமுறும் பெண்களை மற்ற பெண்களும், குற்றம் சாட்டப்பட்ட ஆண்களை பிற ஆண்களும், இரு அணிகளாக நின்று ஊரே அசிங்கப்பட்டு நிற்கிறது.

நம்ம ஹீரோ சாரதியைப் பற்றி தெரிந்துகொள்வோமா?

சாரதி, பள்ளிப் பருவத்திலேயே, பாரதி, பாரதிதாசன், பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம், பாடல்களில் மூழ்கி எழுந்தவன்.

ஏழ்மையை விரட்டவும், பெண்களுக்கு சம உரிமை அளிக்கவும், மக்களாட்சியை வலுப்படுத்தவும், தன் வாழ்வை அர்ப்பணித்துக்கொள்ள முடிவெடுத்தவன்!

Pencilஹாய் பிரெண்ட், கதையை படித்து விட்டு, உங்கள் கருத்தை பகிர மறக்காதீர்கள். உங்கள் ஒவ்வொரு கமன்ட்டும் எழுத்தாளருக்கு மிக பெரிய டானிக். உங்கள் கமண்ட்டை பகிர இதை க்ளிக் செய்யுங்கள் down

பேச்சிலும் எழுத்திலும் மட்டுமே, இவைகளை பரப்புவதைக் காட்டிலும், நடைமுறையில் செயல்படுத்த தீவிரம் காட்டினான்.

காலம் கைகூடி வந்தது! படிப்பு முடிந்ததும், மற்றவர்களைப் போல, அவன் வேலைக்கு மனுப்போடவில்லை, யோசித்தான்.

அவன் சுதந்திர சுபாவத்துக்கு, கைகட்டி எவரிடமும் வேலை செய்யமுடியாது. ஏழைகளுக்கு வேலை தந்து அவர்கள் பசியாற்றவேண்டும், குறிப்பாக பெண்களுக்கு நிறைய வாய்ப்பு தரவேண்டும், மக்களிடையே பணியாற்றவேண்டும் என்ற தனது இலட்சியத்தை நிறைவேற்ற, முடிவெடுத்தான்.

ஆம், பெண்கள் சுலபமாக கற்றுக்கொள்ளக்கூடிய தையற்கலை, உணவு தயாரித்தலை அடிப்படையாக வைத்து, பஸ் நிலயம் அருகே இடம் பிடித்து, ஒரு சிற்றுண்டி கடையையும், பக்கத்திலேயே ஒரு தையல் கடையையும் துவங்கினான்.

சிற்றுண்டி கடைக்கு அன்னலட்சுமி பவன் என்றும், தையற்கடைக்கு தையல்நாயகி கடை எனவும் பெயர் வைத்தான்.

அவன் முதல் போட்டு, கடை துவங்கி, மளிகைப் பொருட்கள், தையல் மிஷின்கள், மேஜை, நாற்காலிகள் முதலியவை வாங்கித் தந்து, மேற்பார்வை பார்த்தானே தவிர, பெண்களையே தொழில் நடத்த ஊக்கம் தந்தான்.

சிற்றுண்டி கடையில், நாலு பெண்களும், தையற்கடையில் எட்டு பெண்களும், பணிபுரிந்தனர்.

சிறுகச் சிறுக, இரு கடைகளிலும் வாடிக்கையாளர்கள் பெருகி, வியாபாரம் அதிகரித்து, பணவரவு வந்ததும், ஊழியர்களின் ஊதியத்தை இருமடங்காக்கியதோடு, சீருடையும் வாங்கித்தந்தான்.

இரு கடைகளும், வட்டாரத்தில், நல்ல பெயர் எடுத்து, பிரபலமாகின. 

ஒருநாள், ஊழியர்கள் அனைவரும் ஒன்றுகூடி, சாரதியை கௌரவிக்க முடிவெடுத்து, அவனிடம் தெரிவித்தனர்.

"ஐயா! எங்க வாழ்க்கையிலே விளக்கேற்றிவைத்த உங்களை கௌரவிக்க ஆசைப்படுகிறோம். அதற்கு மண்டபம் வாடகைக்கு எடுத்து, பாராட்டுவிழா நடத்தி, அதற்கு முதலமைச்சரை அழைத்து, தலைமை தாங்கவைத்து, அவரை உங்களுக்கு பொன்னாடை போர்த்தச் சொல்ல முடிவெடுத்திருக்கிறோம். நீங்க தயவுபண்ணி சம்மதிக்கணும்......."

சாரதி சிரித்தான்.

"நீங்க உழைத்தீர்கள், பலன் கிடைத்தது, வருவாயில் ஊதியமும் சீருடையும் எடுத்துக்கொண்டீர்கள். இதில், என் பங்கு அதிகமில்லை, முதல் போட்டதைத் தவிர! அந்த முதலையும் இந்த இரண்டு ஆண்டுகளில், திருப்பிக் கொடுத்துவிட்டீர்கள். இப்போது இவை உங்கள் உடைமை! சொத்து! ஒற்றுமையாக மேலும் தொழிலில் விருத்தியடைந்து, இன்னும் அதிக பெண்களுக்கு வேலை தந்து வாழ்வு கொடுங்கள். எனக்கு அதுதான் நீங்கள் செய்யும் பாராட்டு!"

சாரதி சொல்லிமுடித்ததும், அத்தனை பெண்களும் அவன் காலில் விழுந்தனர். சிலர் கண்ணீர் வடித்தனர். சிலர் பிரமித்து பேச்சற்று சிலையாயினர்.

"ஐயா! என்றைக்குமே, நீங்கதான் எங்களுக்கு முதலாளி! நாங்கள் உங்கள் தொழிலாளிகள்தான். அதுவே எங்களுக்கு பெருமை!" என்று மனப்பூர்வமாகச் சொன்னார்கள்.

அந்த அளவுக்கு பெண்களால் மதிக்கப்படுகிற சாரதியின் மீதா இன்று புதிதாக ஒருத்தி சேற்றை வீசுகிறாள்!

  •  Start 
  •  Prev 
  •  1  2 
  •  Next 
  •  End 

About the Author

---

Like to read stories? Now you can read full novels at Chillzee KiMo. No wait time,  No ads, No restrictions!!!

Add comment

Comments  
# sorryinfanto 2018-12-10 15:12
sir/mam,

entha kathai avlo suvarasiyama elai... sorry for that but manasula patuchi... atha solitan
Reply | Reply with quote | Quote
# RE: sorryRaVai 2018-12-16 16:41
I like your frankness, Infanto! This is what is expected of a good critic and sincere friend! Continue, please, to give your comments. Thanks.
Reply | Reply with quote | Quote

Come join the FUN!

Write @ Chillzee
Download Chillzee Jokes for Android
(Click the image to get the app from Google Play Store)
Go to top