(Reading time: 8 - 15 minutes)

" ஏன்டா, உனக்கு மூளை கழன்றுபோயிடுத்தா? அதிலே என்ன தப்பு?"

" உலகமே ஒப்புக்கொண்ட உண்மைக்கு எதிர்மறையா இல்லையா? விளக்கமா சொல்றேன், விஞானிகள் கண்டுபிடித்திருப்பது என்ன? பூமி தன்னைத்தானே வேகமாக சுற்றிக்கொண்டும், அதே நேரத்தில் சூரியனையும் சுற்றிவருவதுதானே, உண்மை? வேகமாக சுழல்கிற பூமி எப்படி அசையாமல், நகராமல் இருப்பதாக கூறமுடியும்? அது மட்டுமா? கிழக்கிலே சூரியன் உதிக்கிறான், மேற்கிலே மறைகிறான்னு சொல்கிறோமே, தவறில்லையா? வேகமாக சுழல்கிறபோது, சுற்றிவருகிறபோது, திசைகள் மாறாதா? ஒரு சமயம் கிழக்கிலே தெரிகிற சூரியன், மாறிய நிலையில், வேறு திசையில் தெரியமாட்டானா? ..........."

" சரி, வேறென்ன தவறு?"

" மனித உடல் நமது பார்வைக்கு திடப்பொருளாக தெரிந்தாலும், அது லட்சக்கணக்கான செல்களும் அணுக்களும் பின்னிப் பிணைந்து திடப்பொருள்போல், காட்சி தருகிறது என்பதுதானே, விஞானிகள் கண்டுபிடித்திருக்கிற உண்மை?...."

" போதும்டா! உன்னுடன் இன்னும் கொஞ்சநேரம் பேசிக்கொண்டிருந்தால், அப்பா-பிள்ளை உறவே சரியில்லைனுகூட சொல்லிடுவே, ஆளை விடு!"

 அப்பா நிஜமாகவே ஓடுவதைப் பார்த்து, மகன் சத்தியமூர்த்தி விழுந்து விழுந்து சிரித்தான்!

 அதை கவனித்துக்கொண்டே வந்த, அவன் தாத்தா ஆர்வமுடன் கேட்டார்.

 " சத்யா! எதுக்குடா இப்படி விழுந்து விழுந்து சிரிக்கிறே?"

 " தாத்தா! நான் எங்கே விழுந்தேன்? விழுந்து, விழுந்துன்னு பலமுறை விழுந்து எழுந்தாமாதிரி, ஏன் பொய் சொல்றே?"

 " போடா, போக்கிரி! அப்படி சொல்றது, ஒரு வழக்கம்டா! சரி, விஷயத்தை சொல்லு!"

 " அதுவா, தாத்தா! சமுதாயத்திலே, சரியானதை தப்புன்னும், தப்பானதை சரின்னும், மாற்றி சொல்கிறோம்னு ஒண்ணு ரெண்டு உதாரணம் சொன்னேன். அப்பாவுக்கு பயம் வந்துடுத்து, எங்கே நான் அவருக்கு மகன் இல்லைன்னும், அவர் எனக்கு தந்தையில்லைன்னும் சொல்லிடுவேனோன்னு பயந்துண்டு ஓடறார். அவர் ஓடறதை பார்த்தேன், வேடிக்கையாக இருந்தது, அதுதான் சிரித்தேன்.........."

 " அது சரி, நான் ஏதாவது அந்தமாதிரி தப்பா இதுவரை பேசியிருக்கேனா?"

 " ஏதாவதா! எங்கப்பா தப்பா பேசறதுக்கு காரணமே, நீதானே! நீ சொல்லிக் கொடுத்ததைத் தானே, அவர் கெட்டியாப் பிடிச்சிண்டு தொடர்ந்து பேசறாரு........."

 " உதாரணமா.......?"

 

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.