(Reading time: 8 - 15 minutes)

கனவுகளிலே வருகிற பிறப்பும் இறப்பும் உண்மையா? அது போலத்தான் இதுவும். கடவுள் உறக்கத்திலே காணும் கனவில் வரும் பாத்திரங்கள், எல்லா படைப்பும்!"

 " அப்படியா! தாத்தா! கடவுளும் மனிதனைப் போலே, தூங்குகிறார், விழிக்கிறார், கனவு காண்கிறார்னு சொல்றியா? அவருக்கும் பகல், இரவு, சூரியன் உதிக்கிறது, மறைகிறது, மழை பெய்வது, வெயில் அடிப்பது, பசி, தாகம், எல்லாம் உண்டுங்கிறாயா? ஆமாம் தாத்தா! அப்ப, அவரைத்தவிர, சூரியன், சந்திரன், கடல், மேகம், எல்லாம் இயங்குகின்றன என்கிறாயா?"

கடவுள் ஒருவரேன்னு நீதானே சொன்னே, இப்ப மாற்றி சொல்றே, எது சரி?"

 " சத்யா! இதெல்லாம் பெரிய வேதாந்தம், புரிந்துகொள்கிற சக்தி நம்ம மூளைக்கு கிடையாது, அதற்காக அவை பொய்னு சொல்லமுடியாது, எப்படின்னா, மனிதனின் உடம்பு பார்வைக்கு திடப்பொருளாகத் தெரிந்தாலும், அது திடப்பொருளல்ல, லட்சக்கணக்கான செல்களும் அணுக்களும் பின்னிப் பிணைந்திருக்கின்றன என்று நீதானே சொன்னே, அது நம்ம கண்களுக்கு தெரியாது, விஞானிகளுக்குத்தான் புரியும், அதுபோல, உனக்குப் புரியாத உண்மைகளை பொய்னு தள்ளிடாதே!"

 " தாத்தா! இந்த ஒரு வியாக்கியானத்தைச் சொல்லியே யுகயுகமா காலம் தள்ளிட்டீங்க, சரி, எங்களுக்கு புரியாத, புரிந்துகொள்ளமுடியாத படைப்பின் ரகசியம் உனக்கு மட்டும் எப்படி புரிந்தது? நீயும் எங்களைப் போன்ற மனிதன்தானே?"

 " வேதங்களில் சொல்லியிருக்கிறதை, நான் நம்பறேன், ஏன்னா வேதங்கள் கடவுளால் கூறப்பட்டவை!"

 " அப்படின்னு கடவுளே சொன்னாரா, அல்லது ஆதிமனிதன் சொன்னானா? ஆதிமனிதன் சொல்லியிருந்தால், அவனும் மனிதன்தானே, அவனுக்கு மட்டும் எப்படி புரிந்தது? கடவுளே சொன்னார் என்றால், அவரைத்தவிர இன்னொருவர் இருந்தார், இருக்கிறார், இருப்பார்னு சொல்றீங்களா? அந்த இன்னொருவர், கனவிலே வந்த பாத்திரமா அல்லது நிஜமா பிறவி எடுத்தவரா? சொல்லு, தாத்தா?"

 "சத்யா! நான் சொன்னால், நீ நம்பமாட்டே, உனக்குப் பிடித்த மக்கள்கவிஞர் பாரதியாரே சொல்லியிருக்கிறார், ' வாழ்வுமுற்றும் கனவெனக் கூறிய மறைவலோர்தம் உரை பிழையன்று காண்!'னு அவருடைய சுயசரிதையை இதைச் சொல்லி துவங்கியிருக்கிறார்....."

 "அதே கவிஞர் 'சாதிகள் இல்லையடி பாப்பா' ன்னு பாடியிருக்கிறார், ' தனியொருவனுக்கு உணவிலையெனில் ஜகத்தினை அழித்திடுவோம்'னும் பாடியிருக்கிறார்......."

 " உங்கப்பாவாலே ஓடமுடிந்தது, ஓடிட்டான், எனக்கு வயசாயிடுத்து, ஓடமுடியலே, நடந்தே போயிடறேன், சத்யா! நீ என்ன சொல்லவரே?"

 " ஒண்ணுமே புரியலேஉலகத்திலே!" 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.