(Reading time: 7 - 13 minutes)

சிறுகதை - கதையெல்லாம் எதற்கு? - ரவை

noStory

"யா! வணக்கம். முதன்முதலா, உங்களிடம்தான் வந்திருக்கேன், நீங்க வேண்டாம்னு சொன்னால்தான், அடுத்த தயாரிப்பாளரை பார்ப்பேன்...."

 "வணக்கம். மன்னிக்கணும், உங்களை நான் இதற்கு முன்பு பார்த்ததில்லை, நீங்க யாருன்னு....."

 " உங்களுக்கு நான் யார்னு தெரியவேண்டியதில்லே, ஆனா நான் எதற்கு வந்திருக்கேன்னு, நீங்க கட்டாயம் தெரிஞ்சிக்கணும்........"

 " சரி, சொல்லுங்க!"

 " நீங்க தமிழ் திரையுலகத்திலே நம்பர் ஒன் தயாரிப்பாளர். பிரம்மாண்டமான படங்களை தந்து வெற்றி அடைஞ்சிருக்கீங்க! நீங்க இதுவரையிலும் தயாரித்த அத்தனை படங்களையும் விட, சூப்பரா ஒரு கதை கொண்டு வந்திருக்கேன், இந்தக் கதையை நீங்க தயாரித்தால்தான் அதனுடைய அருமையும் வீச்சும் மக்களை சென்றடையும்......."

 " எனக்கு கொஞ்சம் அவசரவேலை இருக்கு, இப்ப உங்க கதையை கேட்க எனக்கு நேரமில்லே, பிறகு பார்ப்போம்........."

 " நானும் உங்களுக்கு கதையை சொல்லப்போறதில்லே, யாருக்குமே சொல்லமாட்டேன், கதை, திரைக்கதை, வசனம் எல்லாம் என் பொறுப்பு! படத்துக்கு பெரிய இயக்குனர், முன்னணி நடிகர்கள், ஏ.ஆர்.ரகுமான் இசை, எல்லாரையும் ஒப்பந்தம் பண்ணிக்குங்க, நான் ஒவ்வொரு ஷூட்டிங் முன்பும், டைரக்டரிடம் அந்த சீனுக்கு யார் யார் தேவைன்னு சொல்லுவேன், முதல் பத்து ஷூட்டிங் முடிந்தவுடனேயே, உங்களுக்கு என் கதையின் அருமை, வீச்சு புரிஞ்சிடும்........"

 " மிஸ்டர்! கோடிக்கணக்கிலே, முதல் போட்டு படம் எடுக்கிறவன், எதை நம்பி .......?"

 " என் வார்த்தையை நம்பித்தான்......"

 " நீரென்ன கடவுளா?"

 " கடவுள் சொன்னால் போதுமா? அப்படின்னா, ஒண்ணு செய்யுங்க! 'செய்', 'செய்யாதே'ன்னு சீட்டு எழுதி கடவுள் முன்பு குலுக்கிப் போட்டு, உங்க வீட்டு சின்னக் குழந்தையை எடுக்கச் சொல்லுங்க! அந்த முடிவுக்கு நாம் ரெண்டு பேருமே கட்டுப்படுவோம், சரியா?"

 தயாரிப்பாளர் ஏதோ சத்தியத்துக்கு கட்டுப்பட்டதுபோல, இயந்திரமாக சொன்னதை செய்தார்!

 குழந்தை எடுத்துக் கொடுத்த சீட்டை பிரித்துப் பார்த்தார்.

 'செய்' என்றிருந்தது!

தயாரிப்பாளர், எதுவும் புரியாவிட்டாலும், ஏதோ ஒரு மகிழ்ச்சியை உணர்ந்தார்!

 " ஐயா! 'கடவுளை நம்பினோர், கைவிடப்படார்'! கடவுள்மீது பாரத்தைப் போட்டு, நான்

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.