(Reading time: 7 - 13 minutes)

சொல்றபடி நடந்துக்குங்க! நம்பர் ஒன், இந்தப் படத்துக்கு இந்த நிமிடத்திலிருந்து நீங்கதான் கதாசிரியர், திரைக்கதை, வசனமும் நீங்கதான்! என்னை உங்க உதவியாளரா, மற்றவங்களுக்கு அறிமுகப்படுத்துங்க! எல்லாம் நான் செய்துதரேன், ஆனா உங்க பேரிலே!"

 " மிஸ்டர்! எனக்கு சொல்லத் தெரியலே, ஏதோ ஒரு மந்திரத்துக்கு கட்டுப்பட்டாமாதிரி நீர் சொல்றதுக்கெல்லாம்........."

 " ஐயா! நான் உங்க உதவியாளர்! என் பெயர்........நீங்களே தேர்ந்தெடுங்க! என்னை மரியாதையா 'நீர்'னு கூப்பிடாதீங்க, 'நீ', 'வா' 'போ'ன்னு பேசுங்க! அப்பத்தான் மற்றவங்க நம்புவாங்க!"

 " சரி, உன் பெயர் தேவநாதன்! நல்லாயிருக்கா?"

 " தெய்வக் கலப்புள்ள எதுவும் நல்லாத்தான் இருக்கும், ஐயா!"

 " தேவநாதன்! நீ இங்கேயே என்னுடனேயே தங்கிடேன், அப்பத்தான் வசதியாயிருக்கும், உன் குடும்பத்தையும் அழைச்சிண்டு வா! அவுட் ஹவுஸிலே தங்கிக்கோ!"

 " என் குடும்பம் ஶ்ரீவைகுண்டத்திலே இருக்காங்க! அவங்க இங்கே வரமாட்டாங்க. நான் மட்டும்தான்!"

 " நல்லதாப் போச்சு! என்னுடனேயே தங்கிக்கோ! ஆமாம், இவ்வளவு நெருங்கி வந்துட்டோம், இப்பவாவது, கதையை எனக்கு சொல்லக்கூடாதா?"

 " ஐயா! கடவுளை முழுமையா நம்பணும்! உங்களிடம் பேசிக்கொண்டிருப்பது, யார்? தேவநாதன்!"

 " ஓ.கே., ஓ.கே!"

 " ஏன் சொல்றேன்னா, ஒரு கதையை ஒருவர் கற்பனை செய்யும்போதே, மாறிண்டேயிருக்கிற மனதினாலே, கற்பனையும் தாறுமாறா ஓடும்! ரெண்டுபேர் சேர்ந்தால், முறிந்துபோயிடும்!"

 " இப்ப நான் என்ன செய்யணும்?"

 " உங்களுக்கு நம்பிக்கையான டைரக்டரா கூப்பிட்டு ஒப்பந்தம் போடுங்க, அவருக்கு நடிகர், நடிகைகளை தேர்ந்தெடுக்கிற உரிமையை கொடுங்க! ஏ.ஆர். ரகுமானிடம் நீங்களே பேசுங்க!"

 " அவர் என்னவிதமான கதைன்னு கேட்பாரே......?"

 " நான்தான் உங்ககூடவே இருப்பேனே, கவலைப்படாதீங்க!"

 மறுநாளே, இருவரும் இசைப்புயலை சந்தித்தனர்.

 " உங்களுக்கு மிகவும் பிடித்த, ஆனால் அதற்குப் பொருத்தமா கதைகள் வராத காரணத்தால், இதுவரை வெளிவராத ட்யூன்களை எங்களுக்கு கொடுங்கள், நாங்கள் அதற்கு தகுந்தாற்போல, கதையையும் காட்சிகளையும் அமைத்துக்கொள்கிறோம்........"

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.