அவர், மறுபேச்சின்றி, ஒப்புக்கொண்டதை, தயாரிப்பாளர் நம்பமுடியாமல் திகைத்தார்.
" யோவ்! தேவநாதன்! உன் பேச்சிலே ஏதோ வசியம் இருக்குய்யா! மறுபேச்சில்லாம, அவர் ஒத்துக்கிட்டாரே.........."
அடுத்து, இப்படியே டைரக்டரிடமும் சம்மதம் வாங்கியபின், மற்ற தேவையான நடிகர், நடிகைகள், கேமராமேன், எடிடர் முதலானோரை தேர்ந்தெடுக்கும் உரிமையை அவரிடமே தந்தவுடன், அவருக்கு பெரும் சந்தோஷம்!
வேகமாக எல்லாம் நல்லபடியாக முன்னேறியதை நம்பமுடியாமல், தயாரிப்பாளர் தேவநாதனை தனியே அழைத்து பேசினார்.
" தேவா! என்னை மயக்கினமாதிரி, இதுவரையிலும் எல்லாரையும் மயக்கிட்டே, ஆனா கடைசியா இப்ப காமெடியனை ஒப்புக்க வைக்கிறதிலே, ஒரு சிக்கல்!"
" சொல்லுங்க! சரிபண்ணிடுவோம்.........."
" அவர் ரெண்டு கண்டீஷன் போடறாரு, ஒண்ணு, ஹீரோ வர சீன் எல்லாத்திலியும் அவரும் இருக்கணுமாம், ரெண்டாவது அவருக்கு கதை திரைக்கதை வசனம் எல்லாம் பிடிச்சிருக்கணுமாம், என்ன செய்வது?"
" கவலையே படாதீங்க! நான் அவரிடம் பேசறேன்........"
"தேவா! எனக்கென்னவோ, அந்தமாதிரி கண்டீஷன் போடறவங்களே வேண்டாம்னு தோணுது.........."
" ஐயா! நாம டைரக்டருக்கு சுதந்திரம் தந்து அவர் இந்தக் காமெடியனை தேர்ந்தெடுத்திருக்கிறார், கூடுமான வரையிலும் கொடுத்த வாக்கை மீறாமல் இருக்க முயற்சி செய்வோம்......"
" என்னவோ போ! நீயே பேசி அவனை சமாளி!"
டைரக்டரும் தேவநாதனும், காமெடியனை சந்தித்தனர்.
" டைரக்டர் சார்! என்னைப் பற்றி உங்களுக்கு நல்லா தெரியும். ரெண்டு கண்டீஷனுக்கும் சம்மதமா?"
" ஐயா! என் பெயர் தேவநாதன்! தயாரிப்பாளரின் உதவியாளர்! அவர் சார்பா, நான் உங்களுக்கு ஒரு உத்தரவாதம் தரேன், இந்தப் படத்தை நீங்க பணம்போட்டு தயாரிக்கிறதா இருந்தால், எது எதை எப்படி எப்படி செய்யணுமோ, அப்படி அப்படி செய்யலாம்..........."
" என்னய்யா சொல்றே, நீ?"
" நாங்க ஒரு கதையை சொல்லி அது உங்களுக்கு பிடிக்குமோ, பிடிக்காதோன்னு எங்களுக்கு