(Reading time: 7 - 14 minutes)

சிறுகதை - கண்ணில் காட்டாதே! - ரவை

baby Smile

ற்பகம் மிகவும் உஷாராக இருந்தாள், ஒரு விஷயத்தில்!

பிறந்த குழந்தையை, பெற்றவளின் கண்களில் காட்டக்கூடாது!

நர்ஸ் லாவண்யாவின் அருகில் சென்று, கற்பகம் அவளிடம் ரகசியமாக மீண்டும் நினைவுபடுத்தினாள்.

 " லாவண்யா! மறந்துடாதே! குழந்தை பிறந்தவுடனே, நீ அதை, பெற்றவளின் கண்ணில் காட்டாமல், அங்கிருந்து எடுத்து வந்து, என்னென்ன அதற்கு செய்யணுமோ செய்து, இங்க இருக்கிற பத்து பதினைந்து குழந்தைகள் நடுவிலே வைத்துவிடு! எப்படி பெற்றவள் குழந்தையை பார்க்கக்கூடாதோ, அப்படியே நானும் பெற்றவளை பார்க்கமாட்டேன்!"

 " சரிம்மா! கவலைப்படாதீங்க! நீங்க ஏன் சொல்றீங்கன்னு புரியுது!"

 லாவண்யா சொன்னபடியே குழந்தையை, பெற்றவளின் கண்ணில் படாமல், அகற்றி, குளிப்பாட்டி, எடை பார்த்து, டாக்டரிடம் காட்டி, பரிசோதனைக்குப்பின், பல குழந்தைகள் நடுவே குழந்தையை தொட்டிலில் கிடத்திவிட்டு, கற்பகத்திடம் காட்டினாள்.

 " லாவண்யா! நான் ஏன் பெற்றவள் கண்ணிலே குழந்தை படக்கூடாதுன்னு சொன்னேன்னா, அவள் பார்த்துவிட்டால், கட்டாயம் அதற்கு தாய்ப்பால் தர ஆசைப்பட்டு முயற்சிப்பாள். குழந்தைக்கு தாய்ப்பால் ருசி தெரிந்துவிட்டால், பிறகு அதை திரும்பத் திரும்பக் கேட்கும். அதற்கு பெற்றவள் திரும்பத் திரும்ப வருவாள், அப்படி வந்தால், அந்தக் குழந்தை என்னை எப்படி தன் தாயாக ஏற்கும்? அதனால்தான்.........."

 "அம்மா! எனக்கு எல்லாம் புரியும்மா!"

 " குழந்தைக்கு பசும்பால் குடிக்கிற பழக்கத்தை ஏற்படுத்த எத்தனை நாட்கள் ஆகும்?"

 " ஏம்மா! கவலைப்படறீங்க? ரெண்டு மூணு நாட்களிலே குழந்தைக்கு அதை பழக்கி, உங்களிடம் ஒப்படைச்சுடறோம், போதுமா?"

 " லாவண்யா! இந்தா! இந்தப் பணத்தை உன் செலவுக்கு வைச்சுக்க!"

 அப்போது அங்கு கற்பகத்தின் கணவன் சிவம் அங்கு வரவே, இருவரும் உரையாடலை நிறுத்திக்கொண்டு, குழந்தையை சிவத்திடம் காட்டினர்.

 " சிவம்! குழந்தைக்கு உங்க ஜாடை இருக்கில்லே?"

 " கற்பகம்! இதிலென்ன ஆச்சரியம், குழந்தை அப்பாமாதிரியோ, அம்மாமாதிரியோ தானே இருக்கும்? சரி, டாக்டரிடம் பேசிவிட்டேன்! மூணுநாட்களுக்குப் பிறகு குழந்தையை வீட்டுக்கு எடுத்துண்டு போகலாம்னு சொல்லிட்டார், அதுவரையில் நாம் தினமும் இரண்டு முறை வந்து

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.