" நீ கோவிச்சிக்கலேன்னா, சொல்றேன்......."
" நீ என் செல்லப் பேரனாச்சே, உன்னை கோவிச்சிப்பேனா? சொல்லு!"
" நம்ம வீட்டிலே, வரவேற்பறையைவிட, பெரிசா பூஜைரூமை கட்டி, அதிலே இண்டு இடுக்கு இல்லாம, சாமி படங்களா மாட்டிவைச்சு, ஒவ்வொரு சாமிக்கு ஒரு விழாநாளைச் சொல்லி, அதேபோல ஒரு கதையும் சொல்லி, எங்கப்பா மூளையை கெடுத்து வைச்சிருக்கியே, இது தப்பில்லே? இத்தனை சாமிகளிலே ஒருத்தரைவிட இன்னொருவர் பெரியவர், சக்திவாய்ந்தவர்னு சண்டை வேறே! இதெல்லாம் நம்பும்படியாவா இருக்கு?"
" முட்டாள்! உனக்கு புரியலேன்னா, நான் சொன்னது தப்பாயிடுமா? விளக்கமா சொல்றேன், கடவுள் ஒருவர்தான்! அதிலே கருத்து வேறுபாடு இல்லே! ஆனா, அந்தக் கடவுள்தான் பல ரூபத்திலே, பல பேரிலே, அவங்க அவங்களுக்கு பிடித்தமாதிரி சொல்லி கடவுள்நம்பிக்கையை வளர்த்திருக்காங்கடா, முன்னோர்கள்! உதாரணமா, நான், உனக்குத் தாத்தா, உங்கப்பாவுக்கு அப்பா, உங்கம்மாவுக்கு மாமனார், உன் பாட்டிக்கு கணவன்- ஒரே நபர் எப்படி பல உறவுகளா இருக்காரோ, அப்படித்தான் கடவுளும்! உன்னை நான் 'சத்யா'ன்னு கூப்பிடறேன், பாட்டி உன்னை 'செல்லக்குட்டி'ன்னு கூப்பிடறா, உங்கப்பா உன்னை 'சத்தியமூர்த்தி'ன்னும் உங்கம்மா உன்னை 'கண்ணா'ன்னும் கூப்பிடறா! அதுபோலத்தான், கடவுளுக்கும் அவங்க அவங்க விருப்பப்படி பெயர் சொல்லி கூப்பிடறாங்க, இதை புரிஞ்சிக்காம, தப்புங்கறே!"
" நீ சொல்றது உண்மைன்னா, ஏன் ஆயிரம் பிரிவுகள், மக்களிடையே? சைவனுக்கும் வைஷ்ணவனுக்கும் சண்டை, தனித்தனி கோவில்கள், தனித்தனி பழக்கங்கள், வேறுவேறு மந்திரங்கள், எல்லோரும் கடவுளின் படைப்புன்னா, இந்த ஏற்றத்தாழ்வு ஏன்? இதைவிட, பயங்கரம், மதங்கள்! உலகளாவிய மதங்களுக்குள்ளே எத்தனை நாடு தழுவிய போர்கள்! எத்தனை கொலைகள்! சிறுவர், பெண்டிர், முதியோர், நொண்டி, முடம், பார்வையில்லாதோர் எந்தப் பாகுபாடும் இல்லாம, கூட்டம்கூட்டமா சாவு! சமீபத்திலே இலங்கையிலே, கிறிஸ்தவர்களை முஸ்லீம் பயங்கரவாதிகளும், அமெரிக்காவிலே முஸ்லீம்களை கிறிஸ்தவர்களும், காஷ்மீரிலே இந்துக்களை முஸ்லீம்களும், தற்கொலைப்படை வைத்து கூட்டமாக அழித்தவுடன், அதற்கு பதிலடியாக வேறொரு இடத்தில் தாக்கப்பட்ட சமூகம், தாக்கிய சமூகத்தைச் சேர்ந்த அப்பாவிகளை கொல்கிறார்கள், இதெல்லாம் தப்பை சரின்னு சாதிக்குறதுனாலேதானே?"
" சத்யா! இந்த மதப்போர், இனப்போர், இறப்பு, பிறப்பு எல்லாமே பொய்! எதுவுமே உண்மையில்லை! திரையிலே சினிமா பார்ப்பதுபோலத்தான்! நாம் உறங்கும்போது காண்கிற