(Reading time: 9 - 18 minutes)
Mother

சிறுகதை - அவள் என் தாய்! - ரவை

ரவணன் வேலையிலிருந்து வீடு திரும்பி, கதவைத் தட்டினான்!

 கதவை திறந்தஅவன் தாய் சரளா, " யார் நீங்க? சரவணன் இன்னும் வேலையிலிருந்து வரலையே..."

 " அம்மா! நான்தாம்மா, சரவணன்! என்ன தூக்கக் கலக்கமா?"

 " சரவணா! உன் குரல்தாண்டா எனக்கு பரிச்சயமானதாயிருக்கு! உருவம் கண்ணுக்கு தெரியலேடா!......"

 சரவணன் பதறினான்.

 " அம்மா! நாளைக்கே கண்டாக்டரை பார்ப்போம், அறுபது வயசுக்கு மேலே கேடராக்ட் நோய் வருமாம், செக் அப் பண்ணிடுவோம், ஒரு சின்ன ஆபரேஷன் செய்து அரைநாளிலேயே வீட்டுக்கு அனுப்பிடுவா, சரியா?"

 " சரவணா! என் செல்வமே! ஏதோ ஞாபகத்திலே கண்ணிலே சரியா படலை, அவ்வளவுதான்! இதுக்குப்போய், பயப்படலாமா?"

 " அம்மா! அப்படியா சொல்றே? வீட்டுக்குள்ளே, கோவிலுக்குப் போய்வரும்போது, தெருவிலே நடக்கிறபோது, கண் நல்லா தெரியுதா?"

 " ஆமாண்டா கண்ணா! உனக்கு நான் வீண் செலவு வைப்பானா?"

 சரவணனுக்கு யோசனை வேறு திசையில் சென்றது. கடந்த சில நாட்களாக, அம்மாவின் நடவடிக்கைகளில் காணப்படுகின்ற மாறுதல்கள் நினைவில் புரண்டன.

 பத்து நாட்களுக்கு முன்பு, சரவணனுக்கு காலை உணவு பரிமாறிக்கொண்டிருந்தபோது, " அம்மா! சட்னியிலே உப்பு போட மறந்துட்டியா?" என்றவுடன், " அப்படியா?" எனக் கேட்டுவிட்டு, சமையலறைக்குள் சென்றவள், சிறிது நேரமாகியும் வெளியே வரவேயில்லை, சரவணனுக்கு சந்தேகம் வந்து, சமையலறைக்குச் சென்று பார்த்தால், அவன் தாய் அங்கு சுவரை வெறித்துப் பார்த்தவாறு, நின்றுகொண்டிருக்கிறாள்.

 " அம்மா! என்னாச்சு? ஏன் நின்றுகொண்டிருக்கிறே?"

 " சரவணா! எதுக்கு இங்கே வந்தேன்னு ஞாபகத்துக்கு வரலேடா, யோசனை பண்ணிண்டிருக்கிறேன்...."

 என்றாள்.

 அம்மாவுக்கு ஞாபகமறதி வந்துவிட்டது!

 ஒரு வாரம் முன்பு, பிற்பகல் இரண்டு மணிக்கு, சரவணனின் தாய் சற்று கண்ணயர்ந்தாள். சரவணன் அவளை எழுப்பி, " சினிமாவுக்கு போகலாமா?" எனக் கேட்டான்.

 " உனக்கு என்னாச்சு? நடுராத்திரியிலே எழுப்பி சினிமாவுக்கு போகலாமான்னு

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.