(Reading time: 9 - 18 minutes)
Mother

நரகவேதனையும் குறிப்பாக, அவள் காதலனை, முதல் கணவனைஅவள் கண்முன்பே, நான்குபேர் கூட்டாக சேர்ந்து கண்டதுண்டமாக வெட்டியதைப் பார்த்த கொடுமையும்அவள் மனதில் ஆறாத புண்ணாக, மாறாத வடுவாக நிரந்தரமாகத் தங்கிஅவள் மனதை நிலைகுலையச் செய்துவிட்டதை சரவணன் நினைத்துப் பார்த்துதாயின் தற்போதைய உடல், மன நிலைகளை அவைகளுடன் சம்பந்தப்படுத்திதாயை ஒரு சிறந்த மனநிலை மருத்துவரிடம் அழைத்துச் செல்ல முடிவு செய்தான்.

 மருத்துவரிடம் விவரமாக தாயின் நடவடிக்கைகளில் ஏற்பட்டுள்ள மாறுதல்களை தெரிவித்தபோது, அவரும் கவனமாக கேட்டு சிந்தித்து, சரவணனிடம் ரகசியமாக தன் அனுமானத்தை தெரிவித்தார்.

 " சரவணன்! நான் சொல்வதைக் கேட்டு அதிர்ச்சி அடையாதே! உன் அம்மாவுக்கு கண்களில் கோளாறோ, கேடராக்டோ இல்லைஅவள் மனம், அறிவு, உணர்வு, எல்லாமே கொஞ்சம்கொஞ்சமாக செயலிழந்து வருகின்றன. அவளுக்கு பகலுக்கும் இரவுக்கும் வேறுபாடு தெரியாத நிலை, உப்பு எடுத்துவர சமையலறைக்குள் நுழைந்தவளுக்கு ஒரு வினாடியில் வந்த காரணம் மறந்துபோய், மனம் வெறுமையில் ஆழ்ந்ததுஅவள் எதிரே நின்றிருந்த உன்னை அடையாளம் தெரியாமை, எல்லாம் மூளை கொஞ்சம் கொஞ்சமாக செயலிழந்து போவதின் அறிகுறிகள் எல்லாம் அவளை அல்ஷைமர்ஸ் எனும் நோய் தொற்றிக்கொண்டுவிட்டது என்பதின் வெளிப்பாடுகள்! 

 இந்த நோய் ஞாபகமறதியின் இறுதிக்கட்டம்! இது உன் அம்மாவின் வயதுள்ளவர்களுக்கு வருவது சகஜம்தான்! இந்த நோயினால் நேரடியாக மரணம் ஏற்படாது.

 ஆனால், இந்த நோயாளிகள் நாளடைவில் சாப்பிடும் பழக்கத்தையே மறந்து உணவைப் பார்த்தவாறு அமர்ந்திருப்பார்கள். மற்றவர்கள் அவர்களுக்கு ஊட்டிவிட்டாலும், வாய்க்குள் திணித்தாலும், அவர்களுக்கு அதை விழுங்கக்கூடத் தெரியாது, உதட்டோரமாக வழிந்துவிடும்.

 ஆடை அணியத் தெரியாமல் விழிப்பார்கள். பகல், இரவு பாகுபாடு, பழகிய முகங்களை அடையாளம் தெரியாமல் திண்டாடுவர். சில சமயம், எதிரில் நிற்பதே மனதில் பதிவாகாது.

 ஒரு அதிசயம் என்னவென்றால், உப்பு எடுக்க சமையலறைக்குள் சென்றவளுக்கு அது மறந்துபோகலாம், ஆனால் நாற்பது ஆண்டுகள் முன்பு தன் காதல் கணவனை தன் குடும்பத்தாரே, பட்டப்பகலில் நடுவீதியில் கண்டதுண்டமாக வெட்டிக்கொன்றதை ஞாபகம் வைத்திருப்பார்கள்.

 அதுபோல, அவர்கள் மனதில் ஆழமாக நேசித்துவிட்டவர்களின் முகங்களோ, குரலோ மட்டும்

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.