(Reading time: 9 - 18 minutes)
Mother

இறுதி வரையில் மறக்காமல் இருக்கும். அவர்கள் சொல்லுக்கு கட்டுப்படுவார்கள். மற்றவர்களை திட்டுவார்கள், கையில் கிடைத்த கருவியினால் அடிப்பார்கள், தன்னை பட்டினி கொல்லுவதாக பழி சுமத்துவார்கள்.

 பொதுவாக மருத்துவர்கள் இந்த நோயாளிகளுக்கு வைடமின் மாத்திரைகளை சிபாரிசு செய்து அனுப்பிவிடுவார்கள். மூளையின் செயற்பாட்டை மீட்டுவர இன்னும் மருந்து கண்டுபிடிக்கவில்லை.

 சரவணன்! உன்னால் வேலைக்கும் போய்க்கொண்டு உன் தாயையும் கவனித்துக் கொள்வதென்பது இயலாத காரியம்! 

 இம்மாதிரி நோயாளிகளை கவனித்துக்கொள்ள சிறப்புமருத்துவ விடுதிகள் உள்ளன! செலவு அதிகமானாலும், நோயாளியை கவனமாக பார்த்துக்கொள்வார்கள். 

 தாயின்மீதுள்ள பாசத்தில் பைத்தியக்காரத்தனமாக வேலையை விட்டுவிடாதே! அது உனக்கும் நன்மை தராது, உன் தாய்க்கும் பயன்படாது!

 உன்னைத் தவிரஅவளை பகலில் கவனித்துக்கொள்ள உறவினர்கள் ஒருவரும் இல்லையென்றால், அதற்கொரு தகுந்த நர்ஸை நான் ஏற்பாடு செய்து தருகிறேன்.

 ஏன் தெரியுமா? முதலாவது, எக்காரணத்தைக் கொண்டும் உங்கம்மா நெருப்புக்கு அருகில் போக அனுமதிக்கப்படக்கூடாது, நெருப்புக்கும் பருப்புக்கும் வித்தியாசம் தெரியாத நிலையில் இருக்கிறாள்.

 இரண்டாவதுஅவளுக்கு குளிப்பது, பல் தேய்ப்பது எதுவுமே விளங்காது, வேறு ஒருவர்தான் அவைகளை உங்கம்மாவுக்கு செய்து வைக்கவேண்டும். 

 மூன்றாவது, உன் ஒருவனை உங்கம்மா எந்த நிலையிலும் நினைவில் வைத்திருப்பாள் என்பது உறுதி. ஆகவே அவளுக்கு குளிக்க நீ உதவி செய்வதை அவள்விரும்ப மாட்டாள்.

 அதனால்தான், ஒரு பெண் நர்ஸை முழுநேர வேலைக்கு வைத்துக்கொள்!

 சில மாதங்கள் முயற்சி செய்து பார்! முடியவில்லையெனில், நான் சொன்ன சிறப்பு விடுதியில் சேர்த்துவிடு!"

 நீண்ட, விவரமான விளக்கத்தைக் கேட்டபிறகு, இதயத்தை யாரோ குத்திக் குதறியது போல, சரவணனுக்கு வேதனை தாங்காமல் வாய்விட்டு கதறி அழவேண்டும் போலிருந்தது!

 வாழ்வு முழுவதும் தொடர்ந்து துன்பத்தில் உழலுவதற்கென்றே பிறந்துள்ள தன் தாயின் நிலை, விரோதிக்கு கூட வரக்கூடாதென விம்மினான்.

 ஆனால்தாயின் எதிரில், எல்லாவற்றையும் இதயத்துக்குள் புதைத்துக்கொண்டு, சிரித்த

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.