(Reading time: 9 - 18 minutes)
Mother

கேட்கிறே?" என்று பதில் வந்ததும், சரவணன் ஆடிப்போனான்.

 " அம்மா! இது பகல், ராத்திரியில்லே, நல்ல தூக்கமா?"

 " ஓ! களைப்பிலே, அசந்து தூங்கிட்டேனா, ராத்திரின்னே நினைச்சுட்டேன்!"

 சரவணன், தன் தாய்க்கு மனநிலை சரியில்லை, எனப் புரிந்துகொண்டான்.

 நியாயந்தானே? ஏறக்குறைய நாற்பத்தைந்து வருஷமாக அவள் வாழ்வில் சந்தித்த சோதனைகளும் வேதனைகளும், கொஞ்சமா, நஞ்சமா?

 சரளா தனது இருபதாவது வயதில் தன்னுடன் படித்த ஒரு இளைஞனை காதலித்து, பெற்றோரின் எதிர்ப்பையும் மீறி, அவனை பதிவுத் திருமணம் செய்துகொண்டாள். இரண்டே மாதங்களில்அவள் குடும்பத்தார் அந்த இளைஞனை, வேறு சாதியை சேர்ந்தவன்என்ற காரணத்துக்காக, பட்டப்பகலில் நடுவீதியில் ஆணவக்கொலை செய்தனர்.

 வேறு வழியின்றி, சரளா மீண்டும் பெற்றோரிடம் அடைக்கலம் ஆனாள். அவர்களோ, தங்கள் குடும்ப கௌரவத்தையே குலைத்துவிட்டவளை மன்னிக்கத் தயாராயில்லை. வசைமாரி பொழிந்தே அவளை குற்றுயிராக்கினார்கள்.

 அது மட்டுமா? பெற்றோருக்கு முதுமை வந்தவுடன், தங்கள் மறைவுக்குப் பிறகு, சரளாவை யாரும் கவனித்துக்கொள்ள மாட்டார்களே என்னும் பயத்தில், அவளுக்குமறுமணம் செய்துவைக்க எத்தனையோ முயற்சி செய்தனர்.

 ஆனால், அவர்கள் சாதியில் எவரும் முன்வரவில்லை; காரணம், சரளாவின் பின்னணி மட்டுமல்ல, வயது முப்பது ஆகிவிட்டதும் தான்! 

 வேறுவழியின்றி, சரளாவை அவள் அக்காவிடம் ஒப்படைத்துவிட்டு, கண்களை மூடினர்.

 அக்காவும் அவள் கணவனும் சரளாவை வேலைக்காரியைவிட, கேவலமாக நடத்தினர், ஓராண்டு ஈராண்டல்ல, பத்தாண்டு! 

 மீண்டும் ஒரு திருப்பம், சரளாவின் வாழ்வில்! சரளாவின் அக்காவுக்கு மகப்பேறு இல்லாத நிலையில், தங்கையை தன் கணவனுக்கு மறுமணம் செய்துவைத்தாள்.

 சரளாவின் நாற்பதாவது வயதில் பிறந்தவன் சரவணன். அந்த வாரிசுக்கு, கிடைத்த அன்பும் சலுகையும் வசதியும் தாய் சரளாவுக்கு கிட்டவில்லை. அவளை பிள்ளை பெறுவதற்காக மட்டுமே பயன்படுத்திக்கொண்டு, மற்றபடி அவளை தொடர்ந்து ஈனமாகவே நடத்தினர்.

 இதை கவனித்துவந்த சரவணன், நன்றாகப் படித்து, பட்டம் பெற்று, நல்ல வேலையில் அமர்ந்து முதல் காரியமாக தனி வீடு பார்த்து தாயுடன் குடியேறி விட்டான்.

 அதன்பிறகு, சரளா மீளாத துன்பத்திலிருந்து மீண்டு புது வாழ்வு பெற்று மகனுடன் மகிழ்ச்சியாக இருந்தாலும்அவள் நாற்பதுக்கு ஆண்டுகளுக்கு மேலாக அனுபவித்த

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.