(Reading time: 9 - 17 minutes)
Sunset

பாடிக்கொண்டிருக்கிறேன், தங்களை நான் எங்கே வம்புக்கு இழுத்தேன்?"

 " பாடின பாட்டின் முதல் வரியே, என்னை வம்புக்கு இழுப்பதுதானே?"

 மனதுக்குள் மறுபடியும் பாடலைப் பாடிக்கொண்டேன்......'கடவுள் மனிதனாகப் பிறக்கவேண்டும்'......

 " ஐயா! நான் கடவுளைத் தானே குறிப்பிட்டு பாடினேன், அதுவும் கண்ணதாசன் எழுதியதைப்பாடினேன், தங்களை.........?"

 " நான்தான், நீயும் கண்ணதாசனும் குறிப்பிடும் கடவுள்!"

 நடுவீதியில்நெடுஞ்சாண்கிடையாக அவர் காலில் விழுந்தேன். எழுந்திருக்கவேயில்லை! அவரே கைதூக்கி எழுப்பி நிற்கவைத்தார்!

 " ஏன்யா! யார் எது சொன்னாலும் அப்படியே நம்பிவிடுவதா? நான் கடவுள்தானா என்று சோதித்துப் பார்க்கவேண்டாமா?"

 " ஐயோ! அபசாரம்! அபசாரம்! (இதற்கும் எனக்கு பொருள் தெரியாது) தங்களைப் போய், நான் சோதிப்பதா? வெறும் பாடலுக்கே, ஆஜானுபாகுவாக, வழியை மறித்துக்கொண்டு நிற்கிறீர்! கேள்வி கேட்டால், இரண்யனைக் கிழித்து அவன் உடலை மாலையாகப் போட்டுக்கொண்டதுபோல், என்னையும்...........?"

 எதிரிலிருந்த நெடிய உருவம், வாய்விட்டு சிரித்தது!

 இதுதான் நல்ல தருணமென முடிவுகட்டி, அவரை தாஜா பண்ண முயற்சித்தேன்.

 " ஐயா! தங்களுடைய கவர்ச்சிமரமான தோற்றத்தைப் பார்த்தால், எனக்கு எங்கள் சினிமாவில் கிருஷ்ணர், ராமர், வேஷம் போட்டு நடிக்கும் என்.டி.ராமராவ் நினைவுக்கு வருகிறார்.............."

 " என்ன சொல்ல வருகிறாய்?"

 " ஐயா! தாங்களும் என்.டி.ஆரைப்போல் எடுப்பாக, கம்பீரமாக, கவர்ச்சியாக இருக்கிறீர்கள்............"

 " நக்கலா? என்னைப்போல், வேடம் போடுபவன், என்.டி.ஆர்.! அவனைப்போல் நான் இருக்கிறேன்னு சொல்லி என்னை கேவலப்படுத்துகிறாய்! தொடர்ந்து அடுக்கடுக்காக, என்னை வம்புக்கிழுத்துக்கொண்டே இருக்கிறாய், உன்னை..............."

 கையைத் தூக்கி அடிக்க வரும்போது, எதிரில் நிற்கலாமா? விவேகமா? தரையில் விழுந்து அவர் கால்களைப் பற்றிக்கொண்டேன்.

 " சரி சரி, உன்னை அடிக்கமாட்டேன், எழுந்திரு! கொஞ்சநேரம் உன்னுடன் பேசிவிட்டு பிரிகிறேன்! ஆமாம், நான் மனிதனாகப் பிறந்தால், என்ன ஆகுமாம்? கண்ணதாசன் என்ன பயமுறுத்துகிறார்?"

 

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.