(Reading time: 9 - 17 minutes)
Sunset

நம்பவே முடியவில்லையே..........."

 " சரி, சரி, உன் சந்தேகத்தை தீர்த்துவைக்க வேண்டியது என் பொறுப்பு! விவரமாகச் சொல்கிறேன், கேள்!

 உயிரினங்களை படைக்குமுன்னே, இயற்கையைப் படைத்தேன். சூரிய, சந்திர, நட்சத்திரங்களை, கிரகங்களை, நெடிய மலைகளை, பரந்த கடல்களை, விரிந்த வானத்தை, சலசலக்கும் ஆறுகளை, ஆழமான பள்ளத்தாக்கை, மிகச் சிறிய விதையிலிருந்து வளரும் செடி, கொடி, மரங்களை, அவைகளிலே காய், கனி, மலர், பசுமையான இலைகளை படைத்தேன்,ஆனால் அவைகளுக்கு சிந்திக்க, பேச, சக்தி தரவில்லை!

 என் படைப்புகளின் அழகை, நேர்த்தியை, சிறப்பை நான்மட்டுமே ரசித்தேன், அந்த ரசனையை என்னுடன் பகிர்ந்துகொள்ள, என் படைப்பை புகழ, புகழ்ந்து பாட, பாடி என்னுடன் சேர்ந்து மகிழ, ஜீவராசிகளையும் படைத்தேன். முக்கியமாக மனிதனை, சர்வ வல்லமை படைத்தவனாக, பேசும் திறன் உள்ளவனாக, பகுத்தறிவுடையவனாக உருவாக்கினேன்!

 ஆனால், நான் ஒரு தவறு செய்துவிட்டேன், அந்த மனிதனுக்கு சிறிது சுயமாக செயற்படும் சுதந்திரத்தையும் சக்தியையும் கொடுத்தேன். எனது எதிர்பார்ப்பு என்னவெனில், மனிதன், நான் காணாத, அனுபவிக்காத, அம்சங்களை எனக்கு தெரியப்படுத்துவான், அதன் பலனை அனுபவித்து கூடுதலாக மகிழலாமே என்ற பேராசை! 

 அந்த சுதந்திரத்தை, சக்தியை, மனிதனோ தன்னையே அழித்துக்கொள்வதற்கும், யாவருக்கும் பொதுவான அழகை தான் மட்டுமே அனுபவிக்கவேண்டும் எனும் சுயநலத்தில், பறித்துக்கொண்டு, ஒருவருக்கொருவர் அடித்துக்கொண்டு மாய்வானென்றோ, நான் நினைக்கவேயில்லை! ஏன் தெரியுமா? எனக்கு, நல்லது, ஆக்கபூர்வமானது, அழகானது, பொதுவானது, வளர்வது, மட்டுமே தெரிந்திருந்த காரணத்தால், மறுபக்கத்தைப் பார்க்கத் தவறிவிட்டேன். மனிதன் எனக்கு பாடம் கற்றுக் கொடுத்துவிட்டான், குருவுக்கு மிஞ்சிய சிஷ்யன்!"

 " இதற்கொரு விடிவே கிடையாதா? தாங்கள் கருணை காட்டக்கூடாதா? உலகம் அழிவுப் பாதையிலிருந்து ஆக்கபூர்வமான பாதைக்கு திரும்பாதா?"

 " என்னை இந்த கேள்வி கேட்குமுன், என் சந்தேகத்தை நீ தீர்த்துவை! உயிரினங்களுக்கு தாகம் தணிக்க தண்ணீரை ஆறுகளிலும், ஊற்றுகளிலும், நீர்வீழ்ச்சியிலும் அளவின்றி தந்திருப்பதை மனிதன் ஏன் அணைகட்டி, தடுப்பு எழுப்பி, தங்கள் பிரிவினருக்கு மட்டுமே ஒதுக்கிக் கொண்டு அண்டை பகுதிகளில் உள்ளவர்களுக்கு தர மறுக்கிறான்?

 'உலகம் அனைத்துமே உங்களுக்கே!' என்று நான் தந்ததை, கணக்கில்லா நாடுகளாகப்

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.