(Reading time: 11 - 22 minutes)
Sunset

சிறுகதை - தவறு செய்தவன் நெஞ்சம்! - ரவை

ர்வதம், கிழிந்த சேலையை, ஊசி நூலால் தைத்துக் கொண்டிருந்தாள்.

எதிர்பாராமல், நூலில் முடிச்சு கண்டவுடன், தைப்பதை நிறுத்திவிட்டு, தலை கவிழ்ந்து சிந்தனையில் மூழ்கினாள்!

 முனுசாமி, நல்ல பசியில், தட்டிலிருந்த சோற்றை அள்ளி வாயில் திணித்துக்கொண்டிருந்தான். திடுமென, பற்களில் ஒரு சிறிய கல் இடறியது. அதையும் சேர்த்து கடித்து விட்டதால், வாயிலிருந்த அத்தனை சோறுமே விழுங்கமுடியாமல் வீணாகி, வெளியே துப்பினான். சாப்பிடுவதையும் நிறுத்திவிட்டு, யோசனையில் ஆழ்ந்தான்!

 இருவரிடையே ஒரு ஒற்றுமை! இருவருமே தாங்கள் செய்த பிழையால், மன நிம்மதி இழந்து இப்படித்தான் தவிக்கிறார்கள்!

 மகன் முனுசாமியும் அவன் மனைவி பர்வதமும் இப்படி தவிப்பதை கவனித்துக்கொண்டிருந்த, தர்மதுரை அவர்களை நெருங்கிவந்து, அமர்ந்தார்.

 " ஏன் ரெண்டுபேரும் எதையோ பறிகொடுத்தது போல, சிலையா உட்கார்ந்திருக்கீங்க? அப்படியென்னயோசனை?"

 பர்வதம், முனுசாமி இருவருமே தாங்கள் செய்த பிழையை, அவரிடம் தெரிவிப்பதா, வேண்டாமா என தயங்கினர்.

 " புரியுது, ஏதோ தப்பு பண்ணிட்டு இப்ப வருத்தப்படறீங்க! நல்லதுதான்! அப்பத்தான், மறுபடியும் அந்த தப்பை செய்யமாட்டீங்க! ஆனா, அதற்காக, ஏதோ கப்பல் கவிழ்ந்தாற்போல, உட்கார்ந்திருக்கிறதிலே என்ன பயன்? யார் தப்பு செய்யலே? எல்லோரும் ஏதோ ஒரு சந்தர்ப்பத்திலே தப்பு செய்கிறாங்க, தவறு செய்வது மனித இயல்பு! கடவுளிடம் மன்னிப்பு கேட்டுவிட்டு, அத்துடன் அதை மறந்துவிட்டு, வேலையை பாருங்க! முனுசாமி! சாப்பிடு! ரேஷன் அரிசியிலே கல் தான் அரிசியைவிட அதிகம்! எத்தனை பொறுக்கியெடுத்தாலும், ஒண்ணு ரெண்டு இருக்கத்தான் செய்யும்!

 பர்வதம்! நூலில் விழுந்த முடிச்சை அவிழ்த்துவிட்டு, மேற்கொண்டு சேலையை தைத்துமுடி!"

 நீண்ட பிரசங்கம் செய்துவிட்டு, தர்மதுரை நகர்ந்தார்!

 பர்வதம், முனுசாமி இருவருக்குமே ஏமாற்றம்! தர்மதுரை தங்களிடம் என்ன தவறு செய்தீர்கள் எனக் கேட்பார், அப்போது மனதில் உள்ள சோகத்தை கொட்டித் தீர்த்துக்கொள்ளலாம் என நினைத்தனர். அவரோ அதைப்பற்றி விசாரிக்கவேயில்லை!

 சிறிது நேரத்தில், முனுசாமியின் தாய் அங்கு வந்தாள். மகனும் மருமகளும் வருத்தமாக இருப்பதைப் பார்த்து, ஆறுதலாகப் பேசினாள்.

 " பர்வதம்! நீ வேலைக்கும் போயிட்டு வரே, வீட்டுவேலையும் செய்யறே, பாவமாயிருக்கும்மா

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.